News March 1, 2025

பேறு கால பெண்களின் கவனத்திற்கு….

image

பேறுகாலத்தில் பெண்களுக்கு ஏற்படும் உடல்நல பிரச்னைகளில் உயர் ரத்த அழுத்தமும் ஒன்று. கர்ப்பிணி, வளரும் கருவுக்கு தீங்கு விளைவிக்கும் உயர் ரத்த அழுத்த அபாயத்தை குறைப்பதில், கால்சியம் & ஜிங்க் முக்கிய பங்கு வகிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். பருப்பு வகைகள், காளான், சிவப்பு இறைச்சி, பால், அத்தி, பீன்ஸ், முந்திரி, பாதாம், பசலைக்கீரை, பூசணி விதை ஆகியவற்றை உட்கொள்வதன் மூலம் இதை கட்டுப்படுத்தலாம்.

Similar News

News March 1, 2025

மும்மொழியில் வாழ்த்திய தமிழிசை

image

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி தமிழிசை சௌந்தரராஜன், அவருக்கு மும்மொழியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். X தளத்தில் வாழ்த்துப் பதிவிட்டிருக்கும் அவர், தமிழ், ஆங்கிலம் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக அரசு மும்மொழிக் கொள்கையை ஏற்காது என்று முதல்வர் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கும் நிலையில் தமிழிசை அவரை சீண்டியுள்ளார்.

News March 1, 2025

வீடு அல்லது நிலப் பத்திரம் தொலைந்து விட்டதா..?

image

அசல் சொத்து பத்திரம் தொலைந்து விட்டால்: FIR பதிவு செய்யுங்கள் *ஆங்கிலம், பிராந்திய மொழி நாளிதழில் விளம்பரம் கொடுக்கவும் *சொத்து பத்திரத்தின் நகலைப் பெற, பதிவாளர் அலுவலகத்தில் சொத்தின் விபரங்கள், FIR நகல், செய்தித்தாள் விளம்பர நகலை சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் பதிவு செய்யப்பட்ட ஒப்பந்த சான்றிதழை நோட்டரி மூலம் சான்றளியுங்கள் *நகல் பெறுவதற்கான கட்டணத்தை அலுவலகத்தில் Deposit செய்யுங்கள்.

News March 1, 2025

அண்ணாமலையை முதல்வராக்க பாடுபடும் நடிகர்

image

பாஜக தலைவர் அண்ணாமலையை முதல்வராக்க பாடுபடுவேன் என்று நடிகரும் பாஜக நிர்வாகியுமான சரத்குமார் பேசியுள்ளார். தனது சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்துக் கொண்ட அவர், அண்ணாமலையுடன் இணக்கமாக இருக்கிறார். இந்நிலையில், அடுத்த பாஜக தலைவர் ஆகும் எண்ணம் இல்லையென்றும் இறுதி வரை கட்சிக்காக உழைப்பேன் என்றும் அவர் பேசியுள்ளார்.

error: Content is protected !!