News March 1, 2025
பாசிசம், பாதரசம்: விஜயை மறைமுகமாக சாடிய கருணாஸ்

பாசிசத்துக்கும், பாயாசத்திற்கும் வித்தியாசம் தெரியாத சில பாதரசங்கள் இன்றைக்கு தமிழக அரசை விமர்சித்து வருவதாக நடிகர் கருணாஸ் விமர்சித்துள்ளார். பாதரசம் எதிலும் ஒட்டாது, அதைப்போல இவர்கள் மக்களிடம் ஒட்ட மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார். பாதரசங்களை பாசிசம் உருவாக்கி, அவர்களுக்கு பாதுகாப்பையும் கொடுத்து வருவதாகவும் அவர் சாடியுள்ளார்.
Similar News
News March 1, 2025
முதல்வர் ஸ்டாலினை வாழ்த்திய பிரதமர் மோடி

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். “தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற்று மகிழ்ச்சியாக இருக்க வேண்டுகிறேன்” என தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். அரசியல் களத்தில் பிரதமரும், முதல்வரும் இருவேறு துருவங்களாக இருந்தாலும், முதல்வருக்கு, பிரதமர் மோடி வாழ்த்துக் கூறியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.
News March 1, 2025
ரயில்வேயில் 32,438 காலியிடங்கள்: இன்றே கடைசி

ரயில்வேயில் 32,438 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (மார்ச்.1) கடைசி நாளாகும். இந்த வேலைக்கு குறைந்தபட்ச வயதாக 18ம், அதிகபட்ச வயதாக 36ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதியாக 10ம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ தேர்ச்சி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வேலையில் சேர விரும்புவோர், ரயில்வே ஆள்தேர்வு <
News March 1, 2025
உங்க உள்ளங்கையில் ‘X’ ரேகை இருக்கா?

அலெக்சாண்டர், ரஷ்ய அதிபர் புடின் ஆகியோரின் கைகளில் இந்த X ரேகை இருந்ததாம். உங்கள் கையிலும் இருந்தால், பெரும் ஆளுமை திறன் கொண்டவராக இருப்பீர்கள். வாழ்வில் அனைத்திலும் தெளிவான பார்வை கொண்டவர்கள். பிறருக்குப் பயனாக இருக்க வேண்டுமென எண்ணுவீர்கள். பணப் பிரச்னைகள் வந்தாலும், அவை எளிதில் நீங்கும். திருமண வாழ்க்கை இனிமையானதாக இருக்கும். அரசியலில் அதிக நாட்டம் இருக்கும். யாருக்கு இந்த ரேகை இருக்கு?