News March 1, 2025
இன்றைய பொன்மொழிகள்

▶குச்சியைக் குச்சியால் சந்திக்க வேண்டும், கூர்வாளைக் கூர்வாளால் சந்திக்க வேண்டும். ▶மனசாட்சி உறங்கும் சமயத்தில் தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது ▶இழிவு செய்யும் நண்பர்களை விட, எதிர்த்து நிற்கும் பகைவர் மேல். ‘முடியுமா நம்மால்’ என்பது தோல்விக்கு முன்பு வரும் தயக்கம். ‘முடித்தே தீருவோம்’ என்பது வெற்றிக்கான தொடக்கம் ▶தனிமை போன்ற ஒரு கொடுமையும் இல்லை; அதைப்போல் ஒரு உண்மையான நண்பனும் இல்லை
Similar News
News March 15, 2026
30 சிட்டிங் MLA-க்களுக்கு சீட் மறுக்கிறதா திமுக?

திமுகவுக்கு தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் பென் நிறுவனம், உளவுத்துறை ரிப்போர்ட், மற்றொரு தனியார் நிறுவனம் நடத்திய சர்வேயின் அடிப்படையில் திமுக வேட்பாளர் பட்டியல் தயாராகிறதாம். இதன்படி, செயல்பாடுகளின் அடிப்படையில் 30 சிட்டிங் MLA-க்களுக்கு சீட் கிடையாது என கூறப்படுகிறது. தேர்தல் செலவு உள்பட தொகுதிக்கு ₹20 கோடி வரை வேட்பாளர்கள் செலவு செய்ய வேண்டியிருக்கும் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News March 15, 2026
டெல்லியில் விஜய்யை சந்தித்தாரா த்ரிஷா?

கரூர் வழக்கு தொடர்பாக ஆஜராக விஜய் நேற்று டெல்லி சென்றார். அதற்கு முந்தைய நாளே மும்பை சென்ற த்ரிஷா, சில RSS, BJP பிரமுகர்களைச் சந்தித்து தவெக கூட்டணி தொடர்பாக பேசியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு நேற்று டெல்லி சென்ற த்ரிஷா, விஜய்யிடம் கூட்டணி தகவலை கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
News March 15, 2026
வெள்ளி விலை இந்த வாரம் ₹10,000 குறைந்தது!

வெள்ளி விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இந்த வார இறுதியில் கிலோவுக்கு ₹10,000 குறைந்து ₹2,80,000 ஆக உள்ளது. ஈரான் – இஸ்ரேல் போர் உள்ளிட்ட காரணங்களால் மார்ச் முதல் வாரத்தில் கிடுகிடுவென உயர்ந்த வெள்ளியின் விலை, சர்வதேச சந்தையிலும் 6% குறைந்து 1 அவுன்ஸ் 80 டாலராக உள்ளது. இது வரும் நாள்களில் மேலும் குறைய வாய்ப்புள்ளதால், முதலீடு செய்வோர் சற்று யோசித்து முடிவெடுங்கள்.


