News March 1, 2025
ஐ.எஸ்.எல். கால்பந்து: ஒடிசா – முகமதின் ஆட்டம் டிரா

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் ஒடிசா – முகமதின் இடையேயான ஆட்டம் ‘டிரா’ ஆனது. 13 அணிகள் இடையிலான 11வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று ஒடிசாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஒடிசா – முகமதின் அணிகள் மோதின. இதில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியாததால் ஆட்டம் டிரா ஆனது.
Similar News
News March 1, 2025
ரயில்வேயில் 32,438 காலியிடங்கள்: இன்றே கடைசி

ரயில்வேயில் 32,438 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (மார்ச்.1) கடைசி நாளாகும். இந்த வேலைக்கு குறைந்தபட்ச வயதாக 18ம், அதிகபட்ச வயதாக 36ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதியாக 10ம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ தேர்ச்சி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வேலையில் சேர விரும்புவோர், ரயில்வே ஆள்தேர்வு <
News March 1, 2025
இன்று முதல் அமலாகும் முக்கிய மாற்றங்கள்

*மாத முதல் நாளான இன்று, வணிக LPG சிலிண்டர் விலை ₹5.50 உயர்த்தப்பட்டுள்ளது
* FD வட்டியை வங்கிகளே திருத்திக் கொள்ளும் திட்டம் இன்று முதல் அமலாகிறது.
* UPI மூலம் இன்சூரன்ஸ் ப்ரீமியம் செலுத்துவது எளிமைப்படுத்தப்படுகிறது.
* மியூச்சுவல் ஃபண்டுகளுக்கான நாமினிகள் பதிவு செய்யும் விதிகளில் மாற்றம்.
* GST வரிப்பதிவில் multi factor authentication அமல்படுத்தப்பட்டுள்ளது.
News March 1, 2025
சாம்பியன்ஸ் தொடரை காலி செய்த மழை

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர், மழை காரணமாக விறுவிறுப்பை இழந்துள்ளது. முக்கிய லீக் போட்டிகளான AUSvsSA, AUSvsAFG, PAKvsBAN ஆகியவை ரத்தானதால் ரசிகர்கள் ஆர்வமில்லாமல் இருக்கின்றனர். இத்தகைய சூழல் காரணமாக, ஒரு போட்டியில் மட்டுமே வென்றிருக்கும் ஆஸ்திரேலிய அணி, அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. இந்த நிலையை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?