News March 1, 2025

சட்ட விரோத குடியேற்றங்கள் தடுக்கப்படும்: அமித் ஷா

image

சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழையும் அயல்நாட்டவர்களுக்கு உதவுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், சட்டவிரோத ஊடுருவல்காரர்கள் பிரச்னை தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையது என்றார். அதை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Similar News

News March 1, 2025

இன்று முதல் அமலாகும் முக்கிய மாற்றங்கள்

image

*மாத முதல் நாளான இன்று, வணிக LPG சிலிண்டர் விலை ₹5.50 உயர்த்தப்பட்டுள்ளது
* FD வட்டியை வங்கிகளே திருத்திக் கொள்ளும் திட்டம் இன்று முதல் அமலாகிறது.
* UPI மூலம் இன்சூரன்ஸ் ப்ரீமியம் செலுத்துவது எளிமைப்படுத்தப்படுகிறது.
* மியூச்சுவல் ஃபண்டுகளுக்கான நாமினிகள் பதிவு செய்யும் விதிகளில் மாற்றம்.
* GST வரிப்பதிவில் multi factor authentication அமல்படுத்தப்பட்டுள்ளது.

News March 1, 2025

சாம்பியன்ஸ் தொடரை காலி செய்த மழை

image

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர், மழை காரணமாக விறுவிறுப்பை இழந்துள்ளது. முக்கிய லீக் போட்டிகளான AUSvsSA, AUSvsAFG, PAKvsBAN ஆகியவை ரத்தானதால் ரசிகர்கள் ஆர்வமில்லாமல் இருக்கின்றனர். இத்தகைய சூழல் காரணமாக, ஒரு போட்டியில் மட்டுமே வென்றிருக்கும் ஆஸ்திரேலிய அணி, அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. இந்த நிலையை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

News March 1, 2025

செல்வத்தைப் பெருக்கும் மகாவிஷ்ணு காயத்ரி மந்திரம்!

image

சனிக்கிழமை மகாவிஷ்ணுவுக்கு மிகவும் உகந்த தினங்களில் ஒன்றாகும். இன்றைய தினம், இந்த காயத்ரி மந்திரத்தை சொல்வதன் மூலம், வாழ்வில் துன்பங்களை நீக்கி, செல்வத்தைப் பெருக செய்யும் என்பது ஐதீகம்.

ஓம் நாரயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு: ப்ரசோதயாத்

error: Content is protected !!