News March 1, 2025

மெகுல் சோக்சிக்கு ரத்த புற்றுநோய்?

image

PNB வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடி செய்த வழக்கில் தேடப்படும் தொழிலதிபர் மெகுல் சோக்சி பெல்ஜியத்தில் தலைமறைவாக உள்ளார். விசாரணைக்கு ஆஜராகும்படி, அவரை மும்பை விசாரணை நீதிமன்றம் கோரியிருந்தது. இந்நிலையில், ரத்த புற்றுநோய் இருப்பதாகவும், இதற்கு ரேடியேஷன் தெரபி சிகிச்சை எடுப்பதால் இந்தியா வர முடியாது. ஆகஸ்ட் வரை தன்னால் பயணிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.

Similar News

News March 1, 2025

சாம்பியன்ஸ் தொடரை காலி செய்த மழை

image

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர், மழை காரணமாக விறுவிறுப்பை இழந்துள்ளது. முக்கிய லீக் போட்டிகளான AUSvsSA, AUSvsAFG, PAKvsBAN ஆகியவை ரத்தானதால் ரசிகர்கள் ஆர்வமில்லாமல் இருக்கின்றனர். இத்தகைய சூழல் காரணமாக, ஒரு போட்டியில் மட்டுமே வென்றிருக்கும் ஆஸ்திரேலிய அணி, அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. இந்த நிலையை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

News March 1, 2025

செல்வத்தைப் பெருக்கும் மகாவிஷ்ணு காயத்ரி மந்திரம்!

image

சனிக்கிழமை மகாவிஷ்ணுவுக்கு மிகவும் உகந்த தினங்களில் ஒன்றாகும். இன்றைய தினம், இந்த காயத்ரி மந்திரத்தை சொல்வதன் மூலம், வாழ்வில் துன்பங்களை நீக்கி, செல்வத்தைப் பெருக செய்யும் என்பது ஐதீகம்.

ஓம் நாரயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு: ப்ரசோதயாத்

News March 1, 2025

₹1000 கோடி ஹிட் கொடுத்த டைரக்டருடன் இணையும் SK?

image

தொடர்ந்து SK, முன்னணி டைரக்டர்களுடன் இணைய முயன்று வருகிறார். பராசக்தி, மதராஸி படங்களில் நடித்து வரும் அவர், அடுத்ததாக மெகா ப்ராஜெக்ட் ஒன்றில் கமிட் ஆகும் முனைப்பில் இருக்கிறார். ஏற்கனவே லோகேஷ் கனகராஜை மீட் பண்ணி, ஒரு படம் குறித்து SK பேசியதாக கூறப்படும் நிலையில், அவர் அடுத்து அட்லீயையும் மீட் பண்ணி படம் குறித்த டிஸ்கஸ் செய்ததாக கூறப்படுகிறது. அட்லீ – SK காம்போ எப்படி இருக்கும்?

error: Content is protected !!