News March 1, 2025
பிரதமர் உறுதி அளிப்பாரா? CM ஸ்டாலின் கேள்வி

தொகுதி மறுசீரமைப்பால் TNன் தொகுதிகள் குறையாது என PM மோடி உறுதி அளிப்பாரா என CM ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், மிரட்டுனா அடங்குறவங்க இல்ல நாங்க, அடக்க நினைப்பவர்களை அடங்க வைப்பவர்கள் என்றார். TNன் உரிமையை பாதுகாக்க அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டுமென கேட்டுக்கொண்ட அவர், அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்பதாக அறிவித்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.
Similar News
News March 1, 2025
சாம்பியன்ஸ் தொடரை காலி செய்த மழை

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர், மழை காரணமாக விறுவிறுப்பை இழந்துள்ளது. முக்கிய லீக் போட்டிகளான AUSvsSA, AUSvsAFG, PAKvsBAN ஆகியவை ரத்தானதால் ரசிகர்கள் ஆர்வமில்லாமல் இருக்கின்றனர். இத்தகைய சூழல் காரணமாக, ஒரு போட்டியில் மட்டுமே வென்றிருக்கும் ஆஸ்திரேலிய அணி, அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. இந்த நிலையை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
News March 1, 2025
செல்வத்தைப் பெருக்கும் மகாவிஷ்ணு காயத்ரி மந்திரம்!

சனிக்கிழமை மகாவிஷ்ணுவுக்கு மிகவும் உகந்த தினங்களில் ஒன்றாகும். இன்றைய தினம், இந்த காயத்ரி மந்திரத்தை சொல்வதன் மூலம், வாழ்வில் துன்பங்களை நீக்கி, செல்வத்தைப் பெருக செய்யும் என்பது ஐதீகம்.
ஓம் நாரயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு: ப்ரசோதயாத்
News March 1, 2025
₹1000 கோடி ஹிட் கொடுத்த டைரக்டருடன் இணையும் SK?

தொடர்ந்து SK, முன்னணி டைரக்டர்களுடன் இணைய முயன்று வருகிறார். பராசக்தி, மதராஸி படங்களில் நடித்து வரும் அவர், அடுத்ததாக மெகா ப்ராஜெக்ட் ஒன்றில் கமிட் ஆகும் முனைப்பில் இருக்கிறார். ஏற்கனவே லோகேஷ் கனகராஜை மீட் பண்ணி, ஒரு படம் குறித்து SK பேசியதாக கூறப்படும் நிலையில், அவர் அடுத்து அட்லீயையும் மீட் பண்ணி படம் குறித்த டிஸ்கஸ் செய்ததாக கூறப்படுகிறது. அட்லீ – SK காம்போ எப்படி இருக்கும்?