News March 1, 2025
கண்ணீர் விட்டு அழுத வீரப்பன் மகள்

வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் சீமான் ஆஜரானபோது, வீரப்பன் மகள் வித்யாராணியும் வந்திருந்தார். அங்கிருந்த போலீசாரிடம் தாமும் போலீஸ் நிலையத்துக்குள் செல்ல வேண்டும் என அவர் கூறினார். ஆனால் அவரை போலீசார் அனுமதிக்கவில்லை. இதையடுத்து போலீசாருடன் வித்யாராணி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் தன்னையும் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டு அழவும் செய்தார். எனினும் அவரை போலீஸ் அனுமதிக்கவில்லை.
Similar News
News March 1, 2025
நாளை தொடங்குகிறது ரம்ஜான் நோன்பு

இந்த ஆண்டுக்கான ரம்ஜான் முதல் பிறை நாளை (02.03.2025) நிச்சயிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். நேற்றைய தினமான வெள்ளிக்கிழமை தமிழகத்தில் பிறை தென்படவில்லை. ஆகையால், இஸ்லாமிய பெருமக்கள் நாளை முதல் 30 நாள்கள் நோன்பிருந்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடவுள்ளனர். ஷரியத் முறைப்படி இந்த தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாக ஹாஜி தெரிவித்துள்ளார்.
News March 1, 2025
காலை எழுந்தவுடன் உள்ளங்கைகளை பார்ப்பது ஏன்?

அதிகாலை எழுந்தவுடன் உள்ளங்கைகளில் கண் விழிப்பது நல்ல விஷயங்களைக் கொண்டுவரும் என்று இந்து மதத்தில் நம்பப்படுகிறது. அதற்கு காரணம், கல்வியின் அதிபதி சரஸ்வதி, செல்வத்தின் அதிபதி லக்ஷ்மி & காத்தலின் கடவுள் விஷ்ணு ஆகியோர் உள்ளங்கைகளில் வாசம் செய்கின்றனர் என்ற நம்பிக்கைதான். அவர்களை வணங்கி ஒவ்வொரு நாளையும் தொடங்குவது அந்த நாளை இனிமையாக்குகிறது. நீங்களும் டிரை பண்ணி பாருங்க.
News March 1, 2025
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு

சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ₹5.50 உயர்ந்துள்ளது. இதனால், ₹1,965க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ₹818.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் 1ஆம் தேதி வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ₹7 குறைக்கப்பட்டிருந்த நிலையில், இம்மாதம் மீண்டும் உயர்வை கண்டுள்ளது. GAS விலை உயர்வு குறித்த உங்கள் கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க.