News March 1, 2025
டிராகன் பட வெற்றியை கொண்டாடிய LIK படக்குழு

அஸ்வத் மாரிமுத்து, பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவான ‘டிராகன்’ திரைப்படம், சமீபத்தில் ரிலீஸாகி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. இந்த நிலையில், ‘டிராகன்’ படத்தின் வெற்றியை கேக் வெட்டி LIK படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர். சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், படக்குழுவினர் கலந்துகொண்டனர். PR நடிக்கும் LIK படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார்.
Similar News
News March 1, 2025
பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய ஜோடி

ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது. கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ-துருவ் கபிலா ஜோடி, சீனாவின் ஜியா ஜுவான்-மெங் யங் ஜோடி மோதியது. இதில் சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி 21-14, 21-17 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
News March 1, 2025
முதல்வருக்கு சீமான் பிறந்தநாள் வாழ்த்து

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, சீமான் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பாலியல் வழக்கில் போலீசாரின் விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கலைஞர் தன்னை அரசியல் கட்சி தலைவராக்கியதாகவும், ஆனால் ஸ்டாலின் வழக்குப்போட்டு தன்னை நிச்சயம் முதல்வராக்கி விடுவார் என்றார். அரசியல் ரீதியாக எத்தனை இடையூறுகளை ஏற்படுத்தினாலும், அதை உடைத்தெறிவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News March 1, 2025
டிரம்புடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பு

அமெரிக்க அதிபர் டிரம்பை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையில் சந்தித்தார். கனிமவள ஒப்பந்தத்தில் கையெழுத்து போட ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், அதற்கு பதிலாக ரஷ்யாவுக்கு எதிராக போரிட அனைத்து உதவிகளையும் அமெரிக்கா தர அவர் வலியுறுத்தவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, உக்ரைனில் தேர்தல் நடத்தாமல் ஜெலன்ஸ்கி பதவியில் நீடிப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார்.