News February 28, 2025
திடீரென முடங்கிய whatsApp செயலி

வாட்ஸ்ஆப் செயலி திடீரென செயல்படவில்லை என ஆயிரக்கணக்கானோர் தெரிவித்துள்ளனர். சுமார் இரவு 9 மணிக்கு வாட்ஸ்ஆப்பை அணுக முடியவில்லை என்றும், மெசேஜ் அனுப்ப முடியவில்லை எனவும் பலரும் சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளனர். ஆனால், வாட்ஸ்ஆப் தரப்பில் இதுவரை விளக்கம் வரவில்லை. இது நெட்வொர்க் பிரச்னையில்லை, வாட்ஸ்ஆப்பில் தான் பிரச்னை என்கின்றனர் சிலர். உங்களுக்கு வாட்ஸ்ஆப் வேலை செய்கிறதா.. கமெண்ட் பண்ணுங்க.
Similar News
News March 1, 2025
டிரம்புடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பு

அமெரிக்க அதிபர் டிரம்பை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையில் சந்தித்தார். கனிமவள ஒப்பந்தத்தில் கையெழுத்து போட ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், அதற்கு பதிலாக ரஷ்யாவுக்கு எதிராக போரிட அனைத்து உதவிகளையும் அமெரிக்கா தர அவர் வலியுறுத்தவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, உக்ரைனில் தேர்தல் நடத்தாமல் ஜெலன்ஸ்கி பதவியில் நீடிப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார்.
News March 1, 2025
பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 6 பேர் பலி

பாகிஸ்தானில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் ஜமியத் உலமா-இ-இஸ்லாம் சமி கட்சியின் தலைவர் மௌலானா ஹமீதுல் ஹக் கொல்லப்பட்டார். நவ்ஷேரா மாவட்டத்தில் தருல் உலூம் ஹக்கானியா மதர்சாவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்ட நிலையில், 15 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு அந்நாட்டு அதிபர் ஆசிப் அலி சர்தாரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
News March 1, 2025
பேறு கால பெண்களின் கவனத்திற்கு….

பேறுகாலத்தில் பெண்களுக்கு ஏற்படும் உடல்நல பிரச்னைகளில் உயர் ரத்த அழுத்தமும் ஒன்று. கர்ப்பிணி, வளரும் கருவுக்கு தீங்கு விளைவிக்கும் உயர் ரத்த அழுத்த அபாயத்தை குறைப்பதில், கால்சியம் & ஜிங்க் முக்கிய பங்கு வகிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். பருப்பு வகைகள், காளான், சிவப்பு இறைச்சி, பால், அத்தி, பீன்ஸ், முந்திரி, பாதாம், பசலைக்கீரை, பூசணி விதை ஆகியவற்றை உட்கொள்வதன் மூலம் இதை கட்டுப்படுத்தலாம்.