News February 28, 2025
பரோட்டா சாப்பிட்டு சிறுவன் பலி?

சென்னை, திருமுல்லைவாயலில் பரோட்டா சாப்பிட்ட சிறுவன் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. 6-ம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுவன் சுதர்சன் கடந்த திங்களன்று காலையில் பரோட்டா சாப்பிட்டதாகவும், அதிலிருந்து அவனுக்கு வயிற்றுவலி ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், உடல்நிலை மோசமடைந்து நேற்று சிறுவன் உயிரிழந்தான். இந்த மரணத்துக்கு பரோட்டா சாப்பிட்டதா (அ) வேறு காரணமா என போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 1, 2025
முதல்வருக்கு சீமான் பிறந்தநாள் வாழ்த்து

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, சீமான் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பாலியல் வழக்கில் போலீசாரின் விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கலைஞர் தன்னை அரசியல் கட்சி தலைவராக்கியதாகவும், ஆனால் ஸ்டாலின் வழக்குப்போட்டு தன்னை நிச்சயம் முதல்வராக்கி விடுவார் என்றார். அரசியல் ரீதியாக எத்தனை இடையூறுகளை ஏற்படுத்தினாலும், அதை உடைத்தெறிவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News March 1, 2025
டிரம்புடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பு

அமெரிக்க அதிபர் டிரம்பை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையில் சந்தித்தார். கனிமவள ஒப்பந்தத்தில் கையெழுத்து போட ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், அதற்கு பதிலாக ரஷ்யாவுக்கு எதிராக போரிட அனைத்து உதவிகளையும் அமெரிக்கா தர அவர் வலியுறுத்தவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, உக்ரைனில் தேர்தல் நடத்தாமல் ஜெலன்ஸ்கி பதவியில் நீடிப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார்.
News March 1, 2025
பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 6 பேர் பலி

பாகிஸ்தானில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் ஜமியத் உலமா-இ-இஸ்லாம் சமி கட்சியின் தலைவர் மௌலானா ஹமீதுல் ஹக் கொல்லப்பட்டார். நவ்ஷேரா மாவட்டத்தில் தருல் உலூம் ஹக்கானியா மதர்சாவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்ட நிலையில், 15 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு அந்நாட்டு அதிபர் ஆசிப் அலி சர்தாரி கண்டனம் தெரிவித்துள்ளார்.