News February 28, 2025
பரோட்டா சாப்பிடுவதால் மரணம் ஏற்படுமா?

பரோட்டாவால் மரணம் ஏற்பட வாய்ப்பில்லை என்கின்றனர் மருத்துவர்கள். ஆனால், பரோட்டாவால் வயிறு உப்புதல், மலச்சிக்கல், வாயுப் பிரச்னை, நெஞ்செரிச்சல் போன்ற செரிமான பிரச்னைகள் ஏற்படலாம். இதில் மாவுச்சத்து அதிகம் என்பதால் கலோரியும் அதிகம். பரோட்டாவை அவசரமாக உண்ணுவதாலும், அதிகம் வாயில் திணிப்பதாலும் மூச்சுத்திணறி சிலர் இறந்துள்ளனர். ஆகவே, மெதுவாக, மென்று ருசித்து சாப்பிடுவது நல்லது.
Similar News
News March 1, 2025
இவர்கள் ஆட்சிக்கு வருவது பேராபத்து: ஜவாஹிருல்லா

அரசியலையும் சிலர் சினிமாவை போல் நினைப்பதாக நடிகர் விஜயை மறைமுகமாக ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா விமர்சித்துள்ளார். பாசிசமா, பாயாசமா என்று சிலர் சிறுபிள்ளைத்தனமாக பேசுவதாகவும், அவர்கள் ஆட்சிக்கு வருவது தமிழ்நாட்டுக்கு பேராபத்து என்றும் சாடியுள்ளார். சினிமாவை போல் அரசியல் இருக்காது என்றும், பேச்சை கேட்பவர்கள் எல்லாம் நமக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News March 1, 2025
பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய ஜோடி

ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது. கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ-துருவ் கபிலா ஜோடி, சீனாவின் ஜியா ஜுவான்-மெங் யங் ஜோடி மோதியது. இதில் சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி 21-14, 21-17 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
News March 1, 2025
முதல்வருக்கு சீமான் பிறந்தநாள் வாழ்த்து

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, சீமான் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பாலியல் வழக்கில் போலீசாரின் விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கலைஞர் தன்னை அரசியல் கட்சி தலைவராக்கியதாகவும், ஆனால் ஸ்டாலின் வழக்குப்போட்டு தன்னை நிச்சயம் முதல்வராக்கி விடுவார் என்றார். அரசியல் ரீதியாக எத்தனை இடையூறுகளை ஏற்படுத்தினாலும், அதை உடைத்தெறிவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.