News February 28, 2025

AUS-AFG போட்டி நிறுத்தம்! அரையிறுதியில் ஆஸி.,

image

சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் இன்று, ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. லாகூர் மைதானத்தில் தொடர்ந்து மழை பெய்த நிலையில், போட்டியை கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதையடுத்து 2 அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளன. இதனிடையே, குரூப் B பிரிவில் முதல் அணியாக ஆஸ்திரேலியா அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றது.

Similar News

News March 1, 2025

முதல்வருக்கு சீமான் பிறந்தநாள் வாழ்த்து

image

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, சீமான் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பாலியல் வழக்கில் போலீசாரின் விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கலைஞர் தன்னை அரசியல் கட்சி தலைவராக்கியதாகவும், ஆனால் ஸ்டாலின் வழக்குப்போட்டு தன்னை நிச்சயம் முதல்வராக்கி விடுவார் என்றார். அரசியல் ரீதியாக எத்தனை இடையூறுகளை ஏற்படுத்தினாலும், அதை உடைத்தெறிவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

News March 1, 2025

டிரம்புடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பு

image

அமெரிக்க அதிபர் டிரம்பை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையில் சந்தித்தார். கனிமவள ஒப்பந்தத்தில் கையெழுத்து போட ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், அதற்கு பதிலாக ரஷ்யாவுக்கு எதிராக போரிட அனைத்து உதவிகளையும் அமெரிக்கா தர அவர் வலியுறுத்தவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, உக்ரைனில் தேர்தல் நடத்தாமல் ஜெலன்ஸ்கி பதவியில் நீடிப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார்.

News March 1, 2025

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 6 பேர் பலி

image

பாகிஸ்தானில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் ஜமியத் உலமா-இ-இஸ்லாம் சமி கட்சியின் தலைவர் மௌலானா ஹமீதுல் ஹக் கொல்லப்பட்டார். நவ்ஷேரா மாவட்டத்தில் தருல் உலூம் ஹக்கானியா மதர்சாவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்ட நிலையில், 15 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு அந்நாட்டு அதிபர் ஆசிப் அலி சர்தாரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!