News March 30, 2024
ராகுலை எதிர்க்கும் வேட்பாளர் மீது 242 கிரிமினல் வழக்குகள்

வயநாட்டில் ராகுலுக்கு எதிராக போட்டியிடும் பாஜக மாநில தலைவர் சுரேந்திரன் மீது 242 கிரிமினல் வழக்குகள் பதிவாகியுள்ளன. அதில், 237 வழக்குகள் சபரிமலை போராட்டத்திற்காகவும், 5 வழக்குகள் கட்சி போராட்டத்தில் கலந்துகொண்டதற்காகவும் போடப்பட்டுள்ளது. இந்த தகவலை வேட்புமனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேபோன்று, எர்ணாகுளம் பாஜக வேட்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மீது சுமார் 211 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
Similar News
News January 28, 2026
விமானம் 100% பாதுகாப்பானது.. நிறுவனம் விளக்கம்

மகாராஷ்டிரா DCM <<18980498>>அஜித் பவார்<<>> பயணித்த விமானம் 100% பாதுகாப்பானது என அவ்விமான நிறுவனமான VSR ventures விளக்கமளித்துள்ளது. விமான குழுவினரும் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்களே என குறிப்பிட்டு, இந்த விபத்து மோசமான வானிலை மூலம் நிகழ்ந்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. அஜித் பவாருடன் இந்த விபத்தில் விமான பைலட்கள் சுமித் கபூர் & ஷாம்பவி பதக் ஆகியோர் மரணமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
News January 28, 2026
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா காங்கிரஸ்?

தொகுதி பங்கீடு குறித்து ஒரு ரஃப் லிஸ்ட்டை திமுக போட்டுவைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதில் திமுகவுக்கு 164, காங்., 25, விசிக, மதிமுக, CPM, CPI, தேமுதிகவுக்கு தலா 6, ராமதாஸுக்கு 4, கொமதேக, மநீம, IUML-க்கு தலா 3, மமகவுக்கு 2 என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறதாம். இம்முறையும் காங்கிரஸுக்கு 25 தொகுதிகளே ஒதுக்கும் எண்ணத்தில் திமுக இருப்பதால் கூட்டணியில் மேலும் பிரச்னை வெடிக்கலாம் என பேசப்படுகிறது.
News January 28, 2026
திருக்குறளை மேற்கோள் காட்டிய ஜனாதிபதி முர்மு

நாடாளுமன்றத்தின் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் உரையாற்றிய ஜனாதிபதி முர்மு திருக்குறளை மேற்கோள்காட்டியிருப்பது பேசுபொருளாகியுள்ளது. திருவள்ளுவர் கூறுவது போல், எந்த தொழில் செய்பவராக இருந்தாலும், விவசாயத்தை சார்ந்துதான் இருக்கவேண்டும் என கூறியுள்ளார். மேலும், இந்த ஆட்சியில் உணவுப் பொருள் இறக்குமதியை குறைக்க, எண்ணெய் பயிர்கள் உற்பத்திக்கான தேசிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.


