News February 28, 2025
விஸ்கி, பீர் மிக்சிங் செய்து குடித்தால் என்ன நடக்கும்?

சிலருக்கு விஸ்கி குடிக்கும் பழக்கமும், சிலருக்கு பீர் குடிக்கும் பழக்கமும் இருக்கும். இந்த இரண்டும் வெவ்வேறு ஆல்கஹால் என்பதால் இரண்டையும் ஒன்றாக கலந்து குடிப்பது உடல்நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். வாந்தி, பேதி மற்றும் தூக்கமின்மையை அது உண்டாக்கும். அதேபோல், உடல்நலனில் மேலும் பல எதிர்மறை விளைவை ஏற்படுத்தும். ஆதலால் விஸ்கி, பீர் இரண்டையும் கலந்து குடிப்பதை தவிர்ப்பதே நல்லது.
Similar News
News March 1, 2025
பாசிசம், பாதரசம்: விஜயை மறைமுகமாக சாடிய கருணாஸ்

பாசிசத்துக்கும், பாயாசத்திற்கும் வித்தியாசம் தெரியாத சில பாதரசங்கள் இன்றைக்கு தமிழக அரசை விமர்சித்து வருவதாக நடிகர் கருணாஸ் விமர்சித்துள்ளார். பாதரசம் எதிலும் ஒட்டாது, அதைப்போல இவர்கள் மக்களிடம் ஒட்ட மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார். பாதரசங்களை பாசிசம் உருவாக்கி, அவர்களுக்கு பாதுகாப்பையும் கொடுத்து வருவதாகவும் அவர் சாடியுள்ளார்.
News March 1, 2025
இன்றைய பொன்மொழிகள்

▶குச்சியைக் குச்சியால் சந்திக்க வேண்டும், கூர்வாளைக் கூர்வாளால் சந்திக்க வேண்டும். ▶மனசாட்சி உறங்கும் சமயத்தில் தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது ▶இழிவு செய்யும் நண்பர்களை விட, எதிர்த்து நிற்கும் பகைவர் மேல். ‘முடியுமா நம்மால்’ என்பது தோல்விக்கு முன்பு வரும் தயக்கம். ‘முடித்தே தீருவோம்’ என்பது வெற்றிக்கான தொடக்கம் ▶தனிமை போன்ற ஒரு கொடுமையும் இல்லை; அதைப்போல் ஒரு உண்மையான நண்பனும் இல்லை
News March 1, 2025
திமுக ஆட்சி மீண்டும் வேண்டும்: திருமாவளவன்

இந்தியாவுக்கே வழிகாட்டும் ஆற்றல் வாய்ந்த தலைவராக முதல்வர் ஸ்டாலின் இருப்பதாக திருமாவளவன் பாராட்டியுள்ளார். முதல்வரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், இந்த மண்ணையும், மக்களையும் பாதுகாக்க மீண்டும் திமுகவை ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்றார். பெரியாரின் கருத்தியலையும், அம்பேத்கரின் சிந்தனைகளையும் பாதுகாக்க தமிழகத்தில் பாஜக காலூன்ற விடக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.