News February 28, 2025

பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை

image

அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 2025-26ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை மார்ச் 1இல் தொடங்க அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவுறுத்தியிருந்தார். இதன்படி, மாநிலம் முழுவதும் நாளை முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை தொடங்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

Similar News

News March 1, 2025

துபாய் ஓபன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சிட்சிபாஸ்

image

துபாய் ஓபன் டென்னிஸ் போட்டியில் சிட்சிபாஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், நெதர்லாந்து வீரர் டாலன் கிரீக்ஸ்பூர் உடன் மோதினார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய சிட்சிபாஸ் 6-4, 6-4 என்ற கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

News March 1, 2025

பாசிசம், பாதரசம்: விஜயை மறைமுகமாக சாடிய கருணாஸ்

image

பாசிசத்துக்கும், பாயாசத்திற்கும் வித்தியாசம் தெரியாத சில பாதரசங்கள் இன்றைக்கு தமிழக அரசை விமர்சித்து வருவதாக நடிகர் கருணாஸ் விமர்சித்துள்ளார். பாதரசம் எதிலும் ஒட்டாது, அதைப்போல இவர்கள் மக்களிடம் ஒட்ட மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார். பாதரசங்களை பாசிசம் உருவாக்கி, அவர்களுக்கு பாதுகாப்பையும் கொடுத்து வருவதாகவும் அவர் சாடியுள்ளார்.

News March 1, 2025

இன்றைய பொன்மொழிகள்

image

▶குச்சியைக் குச்சியால் சந்திக்க வேண்டும், கூர்வாளைக் கூர்வாளால் சந்திக்க வேண்டும். ▶மனசாட்சி உறங்கும் சமயத்தில் தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது ▶இழிவு செய்யும் நண்பர்களை விட, எதிர்த்து நிற்கும் பகைவர் மேல். ‘முடியுமா நம்மால்’ என்பது தோல்விக்கு முன்பு வரும் தயக்கம். ‘முடித்தே தீருவோம்’ என்பது வெற்றிக்கான தொடக்கம் ▶தனிமை போன்ற ஒரு கொடுமையும் இல்லை; அதைப்போல் ஒரு உண்மையான நண்பனும் இல்லை

error: Content is protected !!