News February 28, 2025
கேப்டன் பதவியில் இருந்து விலகினார் பட்லர்

இங்கிலாந்து ODI மற்றும் T20 தொடர்களில் கேப்டன் பதவியில் இருந்து ஜோஸ் பட்லர் விலகியுள்ளார். சாம்பியன்ஸ் டிராபியில் அணியின் தோல்விக்கு பொறுப்பேற்று அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். T20, ODI தொடர்களில் AUS மற்றும் AFG அணிகளிடம் தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்ததால், பட்லரின் கேப்டன்சி விமர்சிக்கப்பட்டது. SAக்கு எதிராக நாளை நடக்க உள்ள போட்டியே, கேப்டனாக அவரது கடைசி போட்டியாகும்.
Similar News
News March 1, 2025
போர் விமானங்களின் தேவை அதிகரிப்பு: ஏ.பி. சிங்

இந்தியா ஆண்டுதோறும் 35 முதல் 40 போர் விமானங்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று விமானப்படைத் தளபதி ஏ.பி. சிங் தெரிவித்தார். இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் 24 தேஜாஸ் விமானங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், இந்திய விமானப்படை (IAF) தனது பழைய விமானங்களை மாற்றுவதற்கு ஆண்டுக்கு குறைந்தது 35 முதல் 40 போர் விமானங்களை உற்பத்தி செய்ய வேண்டிய தேவை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News March 1, 2025
ஊழலின் மொத்த உருவம் கெஜ்ரிவால்: ரேகா குப்தா

கஜானாவில் இருந்து ஒரு பைசா கூட வீணாகப் போக விடமாட்டேன் என டில்லி முதல்வர் ரேகா குப்தா கூறியுள்ளார். சிஏஜி அறிக்கை அரவிந்த் கெஜ்ரிவால் அரசாங்கத்தின் ஊழலையும், மக்களின் ஆரோக்கியத்தோடு அவர்கள் விளையாடியதை அம்பலப்படுத்தியுள்ளதாகவும் விமர்சித்துள்ளார். ஆம் ஆத்மி டில்லியில் இருந்து வரி வசூலித்து, மற்ற மாநிலங்களில் தேர்தல்களுக்குப் பயன்படுத்தியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
News March 1, 2025
துபாய் ஓபன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சிட்சிபாஸ்

துபாய் ஓபன் டென்னிஸ் போட்டியில் சிட்சிபாஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், நெதர்லாந்து வீரர் டாலன் கிரீக்ஸ்பூர் உடன் மோதினார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய சிட்சிபாஸ் 6-4, 6-4 என்ற கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.