News February 28, 2025
வெளுத்து வாங்கும் கனமழை.. AUS-AFG போட்டி நிறுத்தம்

சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வந்த ஆஸி., ஆப்கன் இடையிலான ஆட்டம் மழையால் தடைபட்டுள்ளது. லாகூரிலுள்ள மைதானத்தில் முதலில் விளையாடிய ஆப்கன் அணி, 273 ரன்களை எடுத்தது. 274 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸி., அணி 12.5 ஓவர்களில் 109/1 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. கனமழை வெளுத்து வாங்கி வருவதால் பிட்ச் முழுவதும் தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டுள்ளது.
Similar News
News April 6, 2026
தமிழகத்தில் 9 பேருக்கு தூக்கு தண்டனை.. பரபரப்பு தீர்ப்பு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 போலீசாருக்கும் இரட்டை மரண தண்டனை விதித்து மதுரை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. முதல் குற்றவாளியான இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு மரண தண்டனையுடன் சேர்த்து ₹15 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை உலுக்கிய இந்த வழக்கின் விசாரணை, 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் நீதிபதி முத்துக்குமரன் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
News April 6, 2026
சாத்தான்குளம் வழக்கில் நீதிபதி அதிரடி தீர்ப்பு

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் 9 பேருக்குமான தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. தந்தை, மகனை நிர்வாணப்படுத்தி அடித்தது கொடூர செயல் என தெரிவித்த மதுரை கோர்ட், சட்டத்தை காக்க வேண்டிய போலீசாரே குற்றம் செய்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், மத்திய அரசு அளித்த அறிக்கையில், குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டது.
News April 6, 2026
தங்கம், வெள்ளி விலை.. ஒரே நாளில் ₹5,000 மாறியது

<<19581206>>தங்கத்தை<<>> போன்று வெள்ளி விலையும் மாலையில் அதிகரித்துள்ளது. கடந்த 5 நாள்களாக மாற்றமின்றி ஒரே விலையில் நீடித்த வெள்ளி, இன்று கிலோவுக்கு ₹5,000 அதிகரித்துள்ளது. தற்போது சென்னையில் வெள்ளி 1 கிராம் ₹260-க்கும் 1 கிலோ ₹2.60 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தை தற்போது ஏற்றத்துடன் காணப்படுவதால் நாளையும் வெள்ளி விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. SHARE IT


