News February 28, 2025
ரூ.1,000 உதவித் தொகைக்கான தேர்வு: புது அறிவிப்பு

8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்வாகும் மாணவர்களின் வங்கிக் கணக்கில் 9 – 12ஆம் வகுப்பு வரை மாதம் ரூ.1,000 உதவித் தொகை செலுத்தப்படும். இந்தத் தேர்வு பிப்.9இல் நடத்தப்பட்டது. இதற்கான விடைக்குறிப்பு www.dge.tn.gov.inஇல் வெளியிடப்பட்ட நிலையில், ஆட்சேபனை இருந்தால், dgedsection@gmail.comஇல் மார்ச் 5க்குள் தெரிவிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் கூறியுள்ளது.
Similar News
News March 1, 2025
திமுக ஆட்சி மீண்டும் வேண்டும்: திருமாவளவன்

இந்தியாவுக்கே வழிகாட்டும் ஆற்றல் வாய்ந்த தலைவராக முதல்வர் ஸ்டாலின் இருப்பதாக திருமாவளவன் பாராட்டியுள்ளார். முதல்வரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், இந்த மண்ணையும், மக்களையும் பாதுகாக்க மீண்டும் திமுகவை ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்றார். பெரியாரின் கருத்தியலையும், அம்பேத்கரின் சிந்தனைகளையும் பாதுகாக்க தமிழகத்தில் பாஜக காலூன்ற விடக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
News March 1, 2025
சின்னப்பசங்க அப்படித்தான் பேசுவார்கள்: முத்தரசன்

பாசிசம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் பாயாசம் பற்றி பேசுவதாக தவெக தலைவர் விஜயை CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் மறைமுகமாக விமர்சித்துள்ளார். அரசியலில் ஆர்வம் காட்டுகிறவர்கள் ஹிட்லரை படித்து, பாசிசம் என்றால் என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். சின்னப் பிள்ளைகள் அப்படிதான் பேசுவார்கள், அதை பெரிதாக எடுத்துக்கொள்ள கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News March 1, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: பயனில சொல்லாமை
▶குறள் எண்: 193
▶குறள்:
நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.
▶பொருள்: ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.