News February 28, 2025

ஆஸ்திரேலியாவுக்கு 274 ரன்கள் இலக்கு

image

சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில், ஆஸ்திரேலிய அணிக்கு 274 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி. லாகூரில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற AFG அணி முதலில் பேட்டிங் செய்தது. அதிகபட்சமாக அடல் 85, ஓமர்சாய் 67 ரன்கள் குவித்தனர். AUS அணி தரப்பில், Dwarshuis 3, ஜாம்பா, ஜான்சன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்தப் போட்டியில் எந்த அணி வெல்லும்? கமெண்ட்ல சொல்லுங்க.

Similar News

News March 31, 2026

AC & Induction stove-ஐ ஒரே நேரத்தில் ON செய்கிறீர்களா?

image

AC & இன்டக்‌ஷன் ஸ்டவ்வை ஒரே நேரத்தில் பயன்படுத்தினால், ஓவர் லோட் ஆகி மின்சார விபத்துகள் ஏற்படலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் மின்சுமை 5-6 KW வரை அதிகரிக்கும். பாதுகாப்பு அமைப்பு(MCB) இல்லாத வீடுகளில், வயர்கள் வெப்பமடைந்து ஷார்ட் சர்க்யூட்டால் தீ விபத்து ஏற்படக்கூடும். மேலும், மின்கட்டணமும் அதிகரிக்கும். எனவே, இரண்டையும் peak hours-ல் ஒரே நேரத்தில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். SHARE.

News March 31, 2026

தொகுதி மாறியது ஏன்? செந்தில் பாலாஜி

image

கரூரில் இருந்து கோவை தெற்கு தொகுதிக்கு மாறியது ஏன் என்று செந்தில் பாலாஜி வெளிப்படையாக பேசியிருக்கிறார். 2021-ல் கோவையிலுள்ள 10 தொகுதிகளிலும் திமுக வெற்றி வாய்ப்பை இழந்ததால், இத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும் என தலைமை சொன்னதால், கோவை தெற்கிற்கு மாறியதாக தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் ரிசல்ட் அன்று தொகுதி மாறியதற்கான காரணம் தெரியவரும் எனவும் சூசகமாக சவால் விடுத்துள்ளார்.

News March 31, 2026

தல இல்லாமல் தடுமாறும் CSK!

image

மற்ற அணிகள் ஈசியாக 200 ரன்களை விளாசும் நிலையில், 100 ரன்களையாவது அடிக்குமா என்ற பரிதாபமான சூழலுக்கு CSK தள்ளப்பட்டு விட்டது. தோனி இல்லாமல் CSK தடுமாறுகிறது என ரசிகர்கள் கூறுவதில் கிட்டத்தட்ட உண்மை உள்ளது. ஆம், தோனி இல்லாமல் இதுவரை IPL-ல் CSK, 6 மேட்ச்சில் விளையாடியுள்ளது. அதில், ஒன்றில் மட்டுமே (DC-க்கு எதிராக, 2010) வெற்றி பெற்றுள்ளது. CSK அணி வெற்றி பாதைக்கு திரும்ப என்ன செய்ய வேண்டும்?

error: Content is protected !!