News February 28, 2025
‘கேம் சேஞ்சர்’ பட ஹீரோயின் கர்ப்பம்

ஷங்கரின் கேம் சேஞ்சர், லட்சுமி, தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தவர் கியாரா அத்வானி. கடந்த 2023ஆம் ஆண்டில் பிரபல நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், கியாரா அத்வானி தற்போது கர்ப்பமாகி உள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தத் தகவலை கியாரா அத்வானியும், சித்தார்த் மல்ஹோத்ராவும் கூட்டாக வெளியிட்டுள்ளனர்.
Similar News
News March 27, 2026
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. மத்திய அரசு விளக்கம்

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்பாக மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கும் வகையில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, ஒரு மாதத்திற்கு தேவையான LPG கையிருப்பில் உள்ளதாகவும், உள்நாட்டு LPG உற்பத்தி 40% அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 8 லட்சம் டன் LPG இறக்குமதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
News March 27, 2026
ஆதவ் அர்ஜுனா மாமியாருக்கு அதிமுகவில் சீட்..!

அதிமுக சார்பில் போட்டியிடும் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை EPS வெளியிட்டார். இந்நிலையில் லால்குடி தொகுதி வேட்பாளராக லீமா ரோஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். பாரிவேந்தரின் <<18825367>>IJK கட்சியில் இருந்து விலகி<<>> பிப்.17-ம் தேதி அதிமுகவில் சேர்ந்த அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இவர் லாட்டரி தொழிலதிபர் மார்ட்டினின் மனைவி மற்றும் ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் ஆவார். <<-se>>#TNElection2026<<>>
News March 27, 2026
அதிமுகவில் EX MLA, MP-களுக்கு சீட்

கும்மிடிபூண்டி – சுதாகர், பொன்னேரி (தனி) – பலராமன் EX MLA, மாதவரம் – மூர்த்தி EX அமைச்சர், திருத்தணி – கோ.அரி EX MP, திருவொற்றியூர் – குப்பன் EX MLA, ஸ்ரீபெரும்புதூர் (தனி) – பழனி EX MLA, தாம்பரம் – சிட்லபாக்கம் ராசேந்திரன் EX MP, வாணியம்பாடி – செந்தில் குமார் MLA, உளுந்தூர்பேட்டை – குமரகுரு EX MLA, பவானிசாகர் – பண்ணாரி MLA உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் போட்டியிடுகின்றனர். <<-se>>#TNElection2026<<>>


