News February 28, 2025
திக்கு முக்காடும் சென்னை

சீமான் இன்று வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகவுள்ள நிலையில், அங்கு நாம் தமிழர் கட்சியினர் கூடியுள்ளனர். மேலும் பலர் வந்து கொண்டே இருப்பதால், அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க, சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு காவலுக்கு குவிக்கப்பட்டுள்ளனர். இரவு 8 மணிக்கு சீமான் ஆஜராகவுள்ள நிலையில், கட்சியினரின் எண்ணிக்கை அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News March 1, 2025
திமுக ஆட்சி மீண்டும் வேண்டும்: திருமாவளவன்

இந்தியாவுக்கே வழிகாட்டும் ஆற்றல் வாய்ந்த தலைவராக முதல்வர் ஸ்டாலின் இருப்பதாக திருமாவளவன் பாராட்டியுள்ளார். முதல்வரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், இந்த மண்ணையும், மக்களையும் பாதுகாக்க மீண்டும் திமுகவை ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்றார். பெரியாரின் கருத்தியலையும், அம்பேத்கரின் சிந்தனைகளையும் பாதுகாக்க தமிழகத்தில் பாஜக காலூன்ற விடக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
News March 1, 2025
சின்னப்பசங்க அப்படித்தான் பேசுவார்கள்: முத்தரசன்

பாசிசம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் பாயாசம் பற்றி பேசுவதாக தவெக தலைவர் விஜயை CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் மறைமுகமாக விமர்சித்துள்ளார். அரசியலில் ஆர்வம் காட்டுகிறவர்கள் ஹிட்லரை படித்து, பாசிசம் என்றால் என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். சின்னப் பிள்ளைகள் அப்படிதான் பேசுவார்கள், அதை பெரிதாக எடுத்துக்கொள்ள கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News March 1, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: பயனில சொல்லாமை
▶குறள் எண்: 193
▶குறள்:
நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.
▶பொருள்: ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.