News February 28, 2025
திட்டமிட்டு அசிங்கப்படுத்த முயற்சி.. சீமான் குற்றச்சாட்டு

திட்டமிட்டு தன்னை அசிங்கப்படுத்த முயற்சி நடப்பதாக சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த அவர், பிறருக்கு உதவுவது போல்தான் விஜயலட்சுமிக்கும் உதவியதாக தெரிவித்தார். விசாரணைக்கு வருவதாக காவல்துறையிடம் தாம் தெரிவித்ததாகவும், இதற்கு இரவு 8 மணிக்கு வர போலீசார் சொன்னதாகவும் அவர் குறிப்பிட்டார். அதிமுக ஆட்சியில் போலீஸ் இப்படி நடக்க மாட்டார்கள் எனவும் கூறினார்.
Similar News
News March 1, 2025
ஐ.எஸ்.எல். கால்பந்து: ஒடிசா – முகமதின் ஆட்டம் டிரா

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் ஒடிசா – முகமதின் இடையேயான ஆட்டம் ‘டிரா’ ஆனது. 13 அணிகள் இடையிலான 11வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று ஒடிசாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஒடிசா – முகமதின் அணிகள் மோதின. இதில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியாததால் ஆட்டம் டிரா ஆனது.
News March 1, 2025
இன்றைய (மார்ச்.01) நல்ல நேரம்

▶மார்ச்- 01 ▶மாசி – 17 ▶கிழமை: சனி
▶நல்ல நேரம்: 07:30 AM – 08:30 AM & 04:30 PM – 05:30 PM
▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 06:30 PM – 07:30 PM
▶ராகு காலம்: 09:00 AM – 10:30 AM
▶எமகண்டம்: 01:30 PM – 03:00 PM
▶குளிகை: 06:00 AM- 07:30 PM
▶திதி: துவிதியை ▶சூலம்: கிழக்கு
▶பரிகாரம்: தயிர் ▶சந்திராஷ்டமம்: மகம்
▶நட்சத்திரம் : பூரட்டாதி ம 1.43
News March 1, 2025
சட்ட விரோத குடியேற்றங்கள் தடுக்கப்படும்: அமித் ஷா

சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழையும் அயல்நாட்டவர்களுக்கு உதவுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், சட்டவிரோத ஊடுருவல்காரர்கள் பிரச்னை தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையது என்றார். அதை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.