News February 28, 2025

ஜல்லிக்கட்டில் காளை குத்தியதில் இளைஞர் உயிரிழப்பு

image

புதுகை, திருமயம் அருகே உள்ள நெய்வாசல் திட்டானிக்கருப்பர் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு, இன்று(பிப்.28) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்நிலையில் காளைகள் வயல் பகுதிகளில் ஆங்காங்கே அவிழ்த்து விடப்பட்ட காளையை அடக்க முயன்ற காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் (24) என்ற வாலிபர் காளை குத்தியதில் படுகாயம் அடைந்து, காரைக்குடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Similar News

News April 19, 2025

கொடும்பாளூர்: அகழாய்வில் கிடைத்த பழமையான பொருட்கள்

image

புதுக்கோட்டை கொடும்பாளூரில் மத்திய தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில் 100க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தங்க அணிகலன்கள், 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பானை ஓடுகள், பாசி மணிகள், நூறு ஆண்டுகளுக்கு முந்தைய கருங்கல் சுவர் உள்ளிட்டவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

News April 19, 2025

புதுக்கோட்டை: கோடைச்சுற்றுலா குடும்பத்தோடு கிளம்புங்க!

image

புதுக்கோட்டையிலிருந்து 17 கி.மீ. தொலைவில் கி.பி 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சித்தன்னவாசல் அமைந்துள்ளது,இங்குள்ள சமனர் குகைகளில் ஒவியங்கள்,அகழ்வராச்சிகளின்படி புதைக்கப்பட்ட பானைகளும்,மனித எலும்புகூடுகளும் உள்ளது,மலையழகும்,பூங்காக்களும்,சிற்பக்கலை,
ஒவியக்கலைகள் இந்த சித்தன்னவாசல் சுற்றுலாதலத்தில் உள்ளது,உள்ளுரில் கோடை சுற்றுலா செல்லும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News April 19, 2025

புதுக்கோட்டையில் தபால் சேவை குறை தீர்க்கும் முகாம்

image

புதுகை மாவட்ட அளவிலான தபால் சேவை குறைதீர்க்கும் முகாம் வருகிற 21ஆம் தேதி பகல் 12 மணி அளவில் புதுகை தலைமை தபால் நிலையம் அலுவலகம் எதிரே உள்ள “மேனா காம்ப்ளக்ஸில்” நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் சேமிப்பு வங்கிக் கணக்கு, காப்பீடு உள்ளிட்ட தங்களது குறைகளை நேரிலோ அல்லது கடிதம் மூலமோ தெரிவிக்கலாம் என அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முருகேசன் தெரிவித்துள்ளார். (SHARE பண்ணுங்க) 

error: Content is protected !!