News February 28, 2025
எச்சில் துப்புறதும் பாலியல் தொல்லையும் ஒன்னா!

பாலியல் தொல்லைக்கு ஆளான 3 வயது சிறுமி, சிறுவன் மீது எச்சில் துப்பியதால்தான் பாலியல் தொல்லை நடந்தது என மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சீர்காழி அருகே சாக்லெட் வாங்கித் தருவதாகக் கூறி சிறுமிக்கு 16 வயது சிறுவன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதில், இரண்டு பக்கமும் தவறு உள்ளது என ஆட்சியரே பேசியிருப்பது கடுமையான கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
Similar News
News March 1, 2025
சட்ட விரோத குடியேற்றங்கள் தடுக்கப்படும்: அமித் ஷா

சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழையும் அயல்நாட்டவர்களுக்கு உதவுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், சட்டவிரோத ஊடுருவல்காரர்கள் பிரச்னை தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையது என்றார். அதை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
News March 1, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச்.1) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
News March 1, 2025
பழிவாங்கும் முயற்சி: சீமான்

அரசியல் ரீதியாக தன்னை எதிர்கொள்ள முடியாதவர்கள் வழக்கு மூலம் முடக்கி விடலாம் என நினைப்பதாக சீமான் விமர்சித்துள்ளார். காவல்துறையினர் விசாரணைக்கு பிறகு பேசிய அவர், கடந்த முறை கேட்ட கேள்விகளையே தன்னிடம் காவல்துறையினர் மீண்டும் கேட்டனர் என்றார். வழக்கு தொடர்பாக தேவைப்பட்டால் மீண்டும் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என போலீசார் கேட்டுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.