News February 28, 2025

வாழ்க்கையை கெடுத்துவிட்டார்: ராஜமெளலி மீது புகார்

image

தெலுங்கு முன்னணி இயக்குநர் ராஜமெளலி மீது, அவரது முன்னாள் நண்பர் ஸ்ரீனிவாஸ் ராவ் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதில், ராஜமெளலி செய்யும் டார்ச்சரால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்துள்ள அவர், தனது சாவுக்கு அவரும், அவரது மனைவி ரமாவும் தான் காரணம் எனத் தெரிவித்துள்ளார். மேலும், 55 வயதாகும் தனக்கு திருமணம் ஆகாததற்கும், ராஜமெளலி தான் காரணம் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Similar News

News March 1, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: பயனில சொல்லாமை
▶குறள் எண்: 193
▶குறள்:
நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.
▶பொருள்: ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.

News March 1, 2025

தமிழ்நாட்டிற்கே தலைகுனிவு: ஜோதிமணி

image

சீமான் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருப்பது தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கூறியுள்ளார். தமிழ் தேசியம் என்பது பெண்களை ஆபாசமாகவும், வக்கிரத்துடன் பேசுவது அல்ல என்றும், பெண்களின் கண்ணியத்தை மதிக்கக்கூடியது எனவும் தெரிவித்துள்ளார். பெண்களை பொருட்டாக மதிக்காத சீமான் போன்றவர்களுக்கு சட்டம் தனது கடமையை செய்யும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News March 1, 2025

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஒடிசா – முகமதின் ஆட்டம் டிரா

image

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் ஒடிசா – முகமதின் இடையேயான ஆட்டம் ‘டிரா’ ஆனது. 13 அணிகள் இடையிலான 11வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று ஒடிசாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஒடிசா – முகமதின் அணிகள் மோதின. இதில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியாததால் ஆட்டம் டிரா ஆனது.

error: Content is protected !!