News February 28, 2025
இன்றே கடைசி நாள்.. ரயில்வேயில் 1,036 Vacancy!

ரயில்வேயில் RRBயின் மூலமாக 1,036 காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன. முதுகலை ஆசிரியர்கள், தலைமை சட்ட உதவியாளர், பொது வழக்கறிஞர்கள் போன்ற பதவிகளுக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கணினி வழி மூலம் தேர்ச்சி நடைபெறும். விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். வேலைக்கேற்ப ₹35,400 – ₹47,900 வரை சம்பளம் வழங்கப்படும். முழு விவரங்களுக்கு <
Similar News
News March 1, 2025
பழிவாங்கும் முயற்சி: சீமான்

அரசியல் ரீதியாக தன்னை எதிர்கொள்ள முடியாதவர்கள் வழக்கு மூலம் முடக்கி விடலாம் என நினைப்பதாக சீமான் விமர்சித்துள்ளார். காவல்துறையினர் விசாரணைக்கு பிறகு பேசிய அவர், கடந்த முறை கேட்ட கேள்விகளையே தன்னிடம் காவல்துறையினர் மீண்டும் கேட்டனர் என்றார். வழக்கு தொடர்பாக தேவைப்பட்டால் மீண்டும் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என போலீசார் கேட்டுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News March 1, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச்.1) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
News March 1, 2025
அமெரிக்க குற்றவாளி ஆனார் பைஜூஸ் ரவீந்திரன்

இந்திய தொழில் முனைவரான பைஜூஸ் ரவீந்திரனை அமெரிக்க நீதிமன்றம் குற்றவாளி என்று அறிவித்துள்ளது. அவர் தலைமையிலான பைஜூஸ் நிறுவனம், அமெரிக்காவில் 533 மில்லியன் டாலர் பணத்தை கையாடல் செய்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவருடன் கேம்ஷாப்ட் என்ற நிதி நிறுவனமும் மோசடியில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த பரிவர்த்தனைகளை ரவீந்திரன் மறைக்க முயற்சித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.