News February 28, 2025
ரூ.50,000 கல்வி உதவித் தொகை.. விண்ணப்பிக்க இன்றே கடைசி

தொழில்நுட்பப் படிப்புகளில் சேர்க்கையை மேம்படுத்துவதற்காக AICTE சார்பில் தகுதியுடைய மாணவர்களுக்கு ‘யசஸ்வி’ திட்டத்தின்கீழ் ஆண்டுதோறும் வங்கிக்கணக்கில் ரூ.50,000, ‘சரஸ்வதி’ திட்டத்தின்கீழ் ரூ.25,000 செலுத்தப்படுகிறது. இந்த 2 உதவித் தொகைக்கும் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். ஆதலால் https://scholarships.gov.in இணையதளத்தில் இன்றே விண்ணப்பிங்க. இந்தத் தகவல்களை நண்பர்களுக்கும் பகிருங்க.
Similar News
News March 1, 2025
அமெரிக்க குற்றவாளி ஆனார் பைஜூஸ் ரவீந்திரன்

இந்திய தொழில் முனைவரான பைஜூஸ் ரவீந்திரனை அமெரிக்க நீதிமன்றம் குற்றவாளி என்று அறிவித்துள்ளது. அவர் தலைமையிலான பைஜூஸ் நிறுவனம், அமெரிக்காவில் 533 மில்லியன் டாலர் பணத்தை கையாடல் செய்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவருடன் கேம்ஷாப்ட் என்ற நிதி நிறுவனமும் மோசடியில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த பரிவர்த்தனைகளை ரவீந்திரன் மறைக்க முயற்சித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
News March 1, 2025
சீமானிடம் விசாரணை நிறைவு

நடிகை பாலியல் புகார் தொடர்பாக சீமானிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்றது. இரவு 10 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் தொடங்கிய விசாரணை இரவு 11.15 மணிக்கு நிறைவடைந்தது. இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், காவல்துறையினர் அப்படியான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்ததும் சீமான் பேட்டியளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
News March 1, 2025
மெகுல் சோக்சிக்கு ரத்த புற்றுநோய்?

PNB வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடி செய்த வழக்கில் தேடப்படும் தொழிலதிபர் மெகுல் சோக்சி பெல்ஜியத்தில் தலைமறைவாக உள்ளார். விசாரணைக்கு ஆஜராகும்படி, அவரை மும்பை விசாரணை நீதிமன்றம் கோரியிருந்தது. இந்நிலையில், ரத்த புற்றுநோய் இருப்பதாகவும், இதற்கு ரேடியேஷன் தெரபி சிகிச்சை எடுப்பதால் இந்தியா வர முடியாது. ஆகஸ்ட் வரை தன்னால் பயணிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.