News February 28, 2025
ஒரு மாதத்தில் ₹20 லட்சத்தை இழந்த பிட்காயின்

சர்வதேச சந்தையில் பிட்காயினின் மதிப்பு மளமளவென சரிந்து வருகிறது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றவுடன் கிடுகிடுவென உயர்ந்த பிட்காயினின் மதிப்பு, ஜனவரி 30ஆம் தேதி ₹90 லட்சத்திற்கு மேல் இருந்தது. அது, கடந்த ஒரு வாரத்தில் கடுமையாக சரிந்து, தற்போது ₹69 லட்சத்திற்கு வர்த்தகம் ஆகிறது. இதனால், சமீபத்தில் அதில் முதலீடு செய்தவர்கள் பெரிய தொகையை இழந்து நஷ்டம் அடைந்துள்ளனர்.
Similar News
News March 1, 2025
கண்ணீர் விட்டு அழுத வீரப்பன் மகள்

வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் சீமான் ஆஜரானபோது, வீரப்பன் மகள் வித்யாராணியும் வந்திருந்தார். அங்கிருந்த போலீசாரிடம் தாமும் போலீஸ் நிலையத்துக்குள் செல்ல வேண்டும் என அவர் கூறினார். ஆனால் அவரை போலீசார் அனுமதிக்கவில்லை. இதையடுத்து போலீசாருடன் வித்யாராணி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் தன்னையும் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டு அழவும் செய்தார். எனினும் அவரை போலீஸ் அனுமதிக்கவில்லை.
News March 1, 2025
டிராகன் பட வெற்றியை கொண்டாடிய LIK படக்குழு

அஸ்வத் மாரிமுத்து, பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவான ‘டிராகன்’ திரைப்படம், சமீபத்தில் ரிலீஸாகி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. இந்த நிலையில், ‘டிராகன்’ படத்தின் வெற்றியை கேக் வெட்டி LIK படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர். சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், படக்குழுவினர் கலந்துகொண்டனர். PR நடிக்கும் LIK படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார்.
News March 1, 2025
டெல்லி அணி அபார வெற்றி

மகளிர் பிரீமியர் லீக் T20 தொடரில், மும்பையை வீழ்த்தி டெல்லி அபார வெற்றி பெற்றது. பெங்களூருவில் முதலில் விளையாடிய MIW அணி, 20 ஓவர்களில் 123/9 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய DCW வீராங்கனைகள், ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி 14.3 ஓவர்களில் 124/1 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். அதிகபட்சமாக மெக் லேனிங் 60, ஷஃபாலி வெர்மா 43 ரன்கள் எடுத்தனர். மும்பை தரப்பில் அமன்ஜோத், ஒரு விக்கெட் வீழ்த்தினார்.