News February 28, 2025

மனைவி டார்ச்சரால் TCS மேனேஜர் தற்கொலை?

image

மனைவியின் டார்ச்சர் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வதாக வீடியோ வெளியிட்டு, ஆக்ராவைச் சேர்ந்த TCS மேனேஜர் மானவ் ஷர்மா (25) தற்கொலை செய்து கொண்டுள்ளார். காதலனுடன் வாழ, தன் மீது பொய் குற்றச்சாட்டுக்களை மனைவி நிகிதா கூறியதாக அவர் வீடியோவில் தெரிவித்துள்ளார். ஆனால், மதுப்பழக்கத்திற்கு அடிமையான மானவ், இதற்கு முன்பும் பல முறை தற்கொலைக்கு முயன்றதாக நிகிதா குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார்.

Similar News

News March 25, 2026

விஜய் படங்களுக்கு தடை.. காங்., கோரிக்கை

image

தேர்தல் முடியும் வரை விஜய் படங்களை டிவியில் ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் என்று காங்., மதுரை தெற்கு பொறுப்பாளர் செய்யது பாபு ECI-க்கு கடிதம் எழுதியுள்ளார். ஜன நாயகன் டிரெய்லர் தியேட்டர்களில் ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, ஜன நாயகன் ரிலீஸ் விவகாரத்தில், ECI தலைமையிடம் ஆலோசித்து முடிவைக் கூறுவதாக அர்ச்சனா பட்நாயக் தெரிவித்திருந்தார்.

News March 25, 2026

நெல்லையில் போட்டியிட விரும்பும் கனிமொழி?

image

திமுகவின் டெல்லி முகமாக இருக்கும் கனிமொழி, தமிழக அரசியலில் நுழைய விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் தேர்தலில் திருச்செந்தூர், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 17 தொகுதிகளில் கனிமொழிக்கு ஆதரவாக திமுகவினர் சிலர் விருப்ப மனு அளித்தனர். ஆனால், அவர் நேர்காணலில் பங்கேற்கவில்லை. இந்நிலையில், நேர்காணலில் பங்கேற்கவில்லை என்றாலும், தலைமை கூறினால் நெல்லையில் போட்டியிட கனிமொழி விரும்புவதாக கூறப்படுகிறது.

News March 25, 2026

ஏசி விலை ₹6,000 வரை உயர்கிறது

image

ஏசி விலைகள் 8% முதல் 12% வரை உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, 1.5 டன் ஏசி தற்போது ₹50,000 எனில், இனி ₹50,400 – ₹56,000 வரை விற்பனை செய்யப்படும். ஜனவரி முதல் அமலுக்கு வந்த புதிய BEE ஆற்றல் மதிப்பீட்டு விதிமுறைகள், உற்பத்திச் செலவை அதிகரித்துள்ளன. இது தவிர, சர்வதேச சந்தையில் தாமிரம் மற்றும் அலுமினியம் போன்ற மூலப்பொருட்களின் விலை உயர்வு நிறுவனங்களின் மீதான சுமையை அதிகரித்துள்ளன.

error: Content is protected !!