News February 28, 2025

ஆப்கனா? ஆஸி.யா? யுத்தம் ஆரம்பம்

image

சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் இன்று ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. லாகூரிலுள்ள மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற AFG அணி கேப்டன் ஷாஹிதி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும் என்பதால், இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Similar News

News March 20, 2026

BREAKING: LJK-வுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

image

புதுச்சேரியில் NDA கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இழுபறி முடிவுக்கு வந்துள்ளது. மொத்தமுள்ள 30 தொகுதிகளில் NR காங்கிரஸ் 16 தொகுதிகள், பாஜக 10 தொகுதிகள், அதிமுக 2 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. முதல் தேர்தலை சந்திக்கும் லட்சிய ஜனநாயக கட்சிக்கும் 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ரங்கசாமியை தொடர்ச்சியாக IJK தலைவர் சார்லஸ் மார்ட்டின் விமர்சித்துவந்த நிலையில், தற்போது அக்கட்சி NDA கூட்டணியில் இணைந்துள்ளது.

News March 20, 2026

ரம்ஜான் விடுமுறை.. 3 நாள்கள் சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

image

நாளை ரம்ஜான் விடுமுறையையொட்டி, மக்கள் சிரமமின்றி ஊர்களுக்கு செல்ல ஏதுவாக இன்று முதல் 3 நாள்களுக்கு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டு வருகின்றன. TNSTC செயலி (அ) இணையதளம் மூலம் இப்போதே டிக்கெட் புக் செய்து நெரிசலின்றி பயணம் செய்யுங்கள். SHARE IT

News March 20, 2026

நீர்யானை தாக்கியதால் பெண் கால்நடை டாக்டர் பலி!

image

கர்நாடகாவில் நீர்யானை தாக்கி பெண் கால்நடை டாக்டர் சமீக்‌ஷா ரெட்டி (27) பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷிமோகாவில் உள்ள உயிரியல் பூங்காவில் கர்ப்பமாக இருந்த நீர்யானையின் உடல் வெப்பநிலையை அவர் பரிசோதிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த நீர்யானை தாக்கியதில் சமீக்‌ஷா படுகாயமடைந்தார். அருகிலுள்ள ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். RIP

error: Content is protected !!