News February 28, 2025
கடனை முடிக்கும் போது, இந்த ஆவணத்தை வாங்கிடுங்க!

கடனை அடைக்கும் போது, இந்த ஆவணங்களை கண்டிப்பாக வாங்கிவிடுங்கள். *அசல் சொத்து ஆவணங்கள் *‘No dues’ சர்டிபிகேட் *Non- Objection சர்டிபிகேட் *Non-Encumbrance சர்டிபிகேட் வில்லங்கமற்ற சான்றிதழ் *கடனை வாங்கும் போது பிந்தைய தேதியிட்ட கொடுத்த காசோலைகள் *கடன் திருப்பிச் செலுத்துதல் தொடர்பான ஸ்டேட்மெண்ட் *கடனுக்கான சொத்தில் கொடுத்த உரிமையை நீக்குவது *புதுப்பிக்கப்பட்ட கடன் அறிக்கை. SHARE IT.
Similar News
News February 28, 2025
போலீஸ் நிலையத்திற்குள் சீமான்.. வெளியே தொண்டர்கள்

விஜயலட்சுமியின் புகார் தொடர்பான விசாரணைக்காக சென்னை வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் சீமான் ஆஜராகியுள்ளார். அவருடன் வழக்கறிஞர்களும் வந்துள்ளனர். சீமானின் கயல்விழி காவல்நிலையம் வரவில்லை. அதேநேரத்தில், நாதக தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல்நிலையத்தைச் சுற்றிலும் குவிந்துள்ளனர். வீரப்பனின் மகள் வித்யாராணி, சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோரை உள்ளே போலீசார் அனுமதிக்கவில்லை.
News February 28, 2025
BREAKING: போலீஸ் நிலையத்தில் சீமான் ஆஜர்

விஜயலட்சுமியின் பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்காக வளசரவாக்கம் காவல்நிலையத்தில் சீமான் ஆஜராகியுள்ளார். ஏற்கெனவே விசாரணைக்கு ஆஜராகும்படி வீட்டில் சம்மனை போலீசார் ஓட்டினர். இந்நிலையில் இன்று இரவு சுமார் 9.30 மணிக்கு நேரில் ஆஜராகும்படி அவரை கோரியிருந்தனர். அதையேற்று, சீமான் இரவு 10 மணிக்கு ஆஜராகியுள்ளார். அவரிடம் விஜயலட்சுமி புகார் குறித்து விசாரிக்கப்படும் எனத் தெரிகிறது.
News February 28, 2025
பரோட்டா சாப்பிட்டு சிறுவன் பலி?

சென்னை, திருமுல்லைவாயலில் பரோட்டா சாப்பிட்ட சிறுவன் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. 6-ம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுவன் சுதர்சன் கடந்த திங்களன்று காலையில் பரோட்டா சாப்பிட்டதாகவும், அதிலிருந்து அவனுக்கு வயிற்றுவலி ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், உடல்நிலை மோசமடைந்து நேற்று சிறுவன் உயிரிழந்தான். இந்த மரணத்துக்கு பரோட்டா சாப்பிட்டதா (அ) வேறு காரணமா என போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.