News February 28, 2025
காவல் ஆய்வாளருக்கு வாரண்ட்.. சீமான் வழக்கில் திடீர் திருப்பம்

சீமான் வீட்டில் நேற்று சம்மன் அளிக்க சென்றபோது ஏற்பட்ட மோதலில் இருவரை கைது செய்த காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷுக்கு வேறொரு வழக்கில் தாம்பரம் கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. 2019இல் வழக்கறிஞர்களை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகாததால் இந்த வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. சீமான் மீதான பாலியல் வழக்கில் அவர் இன்று ஆஜராக உள்ள நிலையில், இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News March 1, 2025
அரிசி விலை மூட்டைக்கு ரூ.100 குறைந்தது

அரிசி விலை கிலோவுக்கு ரூ.2 குறைக்கப்படுவதாக அரிசி ஆலை உரிமையாளர்கள், வணிகர்கள் சங்கத்தினர் நேற்று அறிவித்து இருந்தனர். இதையடுத்து 25 கிலோ மூட்டை அரிசி ரூ.50 குறைக்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், இன்று மூட்டைக்கு ரூ.100 குறைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ரூ.1,250க்கு விற்கப்பட்ட 25 கிலோ மூட்டை அரிசி ரூ.1,150ஆக குறைந்து இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
News March 1, 2025
வரும் 2ம் தேதி முதல் ரமலான் நோன்பு!

ரமலான் மாதத்திற்கான பிறை இன்று தென்படாததால், வரும் ஞாயிறு (மார்ச் 2) முதல் ரமலான் நோன்பு தொடங்குவதாக தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையாக ரமலான் இருந்து வருகிறது. புனித நூலான குர்ஆன் இந்த மாதத்தில் தான் அருளப்பட்டது என்பதால், இஸ்லாமியர்கள் இம்மாதத்தை புனித மாதமாக கருதி, மாதம் முழுவதும் நோன்பு இருந்து 30வது நாளில் ரமலான் பண்டிகையாக கொண்டாடுவார்கள்.
News February 28, 2025
சீமானிடம் போலீஸ் விசாரணை

சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரான சீமானிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விஜயலட்சுமியின் புகார் குறித்து அவரிடம் இணை ஆணையர், உதவி ஆணையர் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் குழு விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தை சுற்றிலும் நாதக தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். இதனால் முன்னெச்சரிக்கையாக போலீஸ் குவிக்கப்பட்டு வருகிறது.