News February 28, 2025
‘Time to go’: ஷாக் கொடுத்த அமிதாப்!

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கடந்த பிப்.7 ஆம் தேதி தனது X தள பதிவில், ‘time to go’ எனப் பதிவிட்டார். இதனை பார்த்து ரசிகர்கள் அவர் சினிமாவில் இருந்து ஓய்வு பெற போகிறார் என பேசினர். இது குறித்து கோன் பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சியில் ரசிகர் அமிதாபிடம் கேட்க, அதற்கு அவர் ஜாலியாக பதிலளித்துள்ளார். ‘ஓ பிரதர், நான் வேலைக்குச் செல்ல வேண்டிய நேரம் இது’ என வேடிக்கையாக பதிலளித்தார்.
Similar News
News February 28, 2025
பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை

அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 2025-26ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை மார்ச் 1இல் தொடங்க அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவுறுத்தியிருந்தார். இதன்படி, மாநிலம் முழுவதும் நாளை முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை தொடங்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
News February 28, 2025
கேப்டன் பதவியில் இருந்து விலகினார் பட்லர்

இங்கிலாந்து ODI மற்றும் T20 தொடர்களில் கேப்டன் பதவியில் இருந்து ஜோஸ் பட்லர் விலகியுள்ளார். சாம்பியன்ஸ் டிராபியில் அணியின் தோல்விக்கு பொறுப்பேற்று அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். T20, ODI தொடர்களில் AUS மற்றும் AFG அணிகளிடம் தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்ததால், பட்லரின் கேப்டன்சி விமர்சிக்கப்பட்டது. SAக்கு எதிராக நாளை நடக்க உள்ள போட்டியே, கேப்டனாக அவரது கடைசி போட்டியாகும்.
News February 28, 2025
வெளுத்து வாங்கும் கனமழை.. AUS-AFG போட்டி நிறுத்தம்

சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வந்த ஆஸி., ஆப்கன் இடையிலான ஆட்டம் மழையால் தடைபட்டுள்ளது. லாகூரிலுள்ள மைதானத்தில் முதலில் விளையாடிய ஆப்கன் அணி, 273 ரன்களை எடுத்தது. 274 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸி., அணி 12.5 ஓவர்களில் 109/1 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. கனமழை வெளுத்து வாங்கி வருவதால் பிட்ச் முழுவதும் தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டுள்ளது.