News February 28, 2025
கொடூரனை போலீஸ் பிடித்தது எப்படி?

புனே பஸ்ஸில் இளம் பெண்ணை <<15604209>>ரேப்<<>> செய்த கொடூரனை 75 மணி நேர தேடுதல் வேட்டைக்குப் பின் பிடித்துள்ளனர். இதற்காக போலீஸ் 13 படைகளை அமைத்தது. ட்ரோன்கள், மோப்ப நாய் உதவியுடன் புனே மாவட்டம் முழுவதும் ஜல்லடை போட்டு தேடினர். இதில் அவனை பிடிக்க மிக முக்கிய துப்பாக இருந்தது அவன் கழட்டி வீசிச் சென்ற சட்டை தான். அதில் இருந்த சென்ட் வாசனை மூலம் மோப்ப நாய் பின்தொடர்ந்து சென்று பிடிக்க உதவி இருக்கிறது.
Similar News
News April 9, 2026
தமிழகத்தில் 4,969 வேட்புமனுக்கள் ஏற்பு..

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் நிறைவடைந்தது. அதன்படி, 4,969 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ள நிலையில், 2,467 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 89 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியாகும்.
News April 9, 2026
வீடு, கார் இல்லை.. நாட்டின் ஏழ்மையான CM யார் தெரியுமா?

மேற்குவங்க CM மம்தா பிரமாண பத்திரத்தில் தனக்கு சொந்த வீடோ காரோ இல்லை என்று தெரிவித்துள்ளார். தன்னிடம் 9.75 கிராம் தங்கமும், ₹75,700 ரொக்கமும் இருப்பதாகவும், அசையும் சொத்து மதிப்பு ₹15.38 லட்சம் தான் என்றும் குறிப்பிட்டுள்ளார். இவர் தாக்கல் செய்துள்ள Affidavit-ஐ அடிப்படையாக கொண்டு பார்த்தால், இவரே தற்போதைக்கு இந்தியாவில் குறைவான சொத்துகளை கொண்டுள்ள CM-ஆக அறியப்படுகிறார்.
News April 9, 2026
விடுமுறை.. நாளை முதல் சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

வார இறுதி, தமிழ் புத்தாண்டு விடுமுறையையொட்டி, மக்கள் ஊர்களுக்கு செல்ல, நாளை (ஏப்.10) முதல் 5 நாள்களுக்கு சிறப்பு பஸ்களை அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை உள்பட முக்கிய நகரங்களில் இருந்து கூடுதலாக 2,119 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதுவரை 10,000-க்கும் அதிகமானோர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். <


