News February 28, 2025
பிரதமரின் டிகிரி சான்றிதழை காட்ட தயார்

பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழை காட்ட தயார் என டில்லி ஐகோர்ட்டில் டில்லி பல்கலை. தெரிவித்துள்ளது. ஆனால், பாதுகாப்பு கருதியும், பிரதமரின் தனிநபர் சுதந்திரம் கருதியும், இந்த தகவல்களை பொதுவெளியில் காட்ட முடியாது எனவும் கூறியுள்ளது. பிரதமர் டிகிரி முடித்ததில் சந்தேகம் இருப்பதாக கூறி, மத்திய தகவல் கமிஷனிடம் நீரஜ் என்பவர் சான்றிதழை கோரினார். இதை எதிர்த்து பல்கலை. வழக்கு தொடர்ந்தது.
Similar News
News February 28, 2025
வெளுத்து வாங்கும் கனமழை.. AUS-AFG போட்டி நிறுத்தம்

சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வந்த ஆஸி., ஆப்கன் இடையிலான ஆட்டம் மழையால் தடைபட்டுள்ளது. லாகூரிலுள்ள மைதானத்தில் முதலில் விளையாடிய ஆப்கன் அணி, 273 ரன்களை எடுத்தது. 274 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸி., அணி 12.5 ஓவர்களில் 109/1 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. கனமழை வெளுத்து வாங்கி வருவதால் பிட்ச் முழுவதும் தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டுள்ளது.
News February 28, 2025
தமிழக மக்கள் ஒருபோதும் இணங்க மாட்டார்கள்: திருமா

தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் இந்தியை கற்க வேண்டுமென ஆளுநர் கூறுவது RSS, BJPயின் ஆதிக்க மனப்பான்மையை உறுதிப்படுத்துவதாக திருமாவளவன் விமர்சித்துள்ளார். ஒரே தேசம், ஒரே மொழியை செயல்படுத்துவதற்காக ஆளுநர் இப்படி பேசி வருவதாகவும், அவரின் பேச்சுக்கு தமிழக மக்கள் ஒருபோதும் இணங்க மாட்டார்கள் என்றும் கூறினார். மேலும், தமிழகத்தில் மட்டுமல்ல எந்த மாநிலத்திலும் இந்தியை திணிக்கக் கூடாது என்றார்.
News February 28, 2025
ரூ.1,000 உதவித் தொகைக்கான தேர்வு: புது அறிவிப்பு

8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்வாகும் மாணவர்களின் வங்கிக் கணக்கில் 9 – 12ஆம் வகுப்பு வரை மாதம் ரூ.1,000 உதவித் தொகை செலுத்தப்படும். இந்தத் தேர்வு பிப்.9இல் நடத்தப்பட்டது. இதற்கான விடைக்குறிப்பு www.dge.tn.gov.inஇல் வெளியிடப்பட்ட நிலையில், ஆட்சேபனை இருந்தால், dgedsection@gmail.comஇல் மார்ச் 5க்குள் தெரிவிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் கூறியுள்ளது.