News February 28, 2025

தமிழ்நாட்டில் போதைப்பொருள் பழக்கம் அதிகரிப்பு: கவர்னர்

image

தமிழ்நாட்டின் தென்மாவட்டங்கள் கைவிடப்பட்ட கொள்ளைப்புறம் போல் கண்டுகொள்ளப்படாமல் உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்துள்ளார். தென்மாவட்ட தொழில்முனைவோர், கல்வியாளர்களுடன் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், தொழில்துறைக்கான வாய்ப்புகள் ஏராளமாக இருந்தும் மக்களுக்கு அது தரப்படவில்லை என சாடினார். தென்மாவட்ட இளைஞர்களிடம் போதைப்பொருள் பழக்கம் அதிகரித்திருப்பதும் கவலையளிக்கிறது என்று கூறினார்.

Similar News

News February 28, 2025

வெளுத்து வாங்கும் கனமழை.. AUS-AFG போட்டி நிறுத்தம்

image

சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வந்த ஆஸி., ஆப்கன் இடையிலான ஆட்டம் மழையால் தடைபட்டுள்ளது. லாகூரிலுள்ள மைதானத்தில் முதலில் விளையாடிய ஆப்கன் அணி, 273 ரன்களை எடுத்தது. 274 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸி., அணி 12.5 ஓவர்களில் 109/1 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. கனமழை வெளுத்து வாங்கி வருவதால் பிட்ச் முழுவதும் தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டுள்ளது.

News February 28, 2025

தமிழக மக்கள் ஒருபோதும் இணங்க மாட்டார்கள்: திருமா

image

தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் இந்தியை கற்க வேண்டுமென ஆளுநர் கூறுவது RSS, BJPயின் ஆதிக்க மனப்பான்மையை உறுதிப்படுத்துவதாக திருமாவளவன் விமர்சித்துள்ளார். ஒரே தேசம், ஒரே மொழியை செயல்படுத்துவதற்காக ஆளுநர் இப்படி பேசி வருவதாகவும், அவரின் பேச்சுக்கு தமிழக மக்கள் ஒருபோதும் இணங்க மாட்டார்கள் என்றும் கூறினார். மேலும், தமிழகத்தில் மட்டுமல்ல எந்த மாநிலத்திலும் இந்தியை திணிக்கக் கூடாது என்றார்.

News February 28, 2025

ரூ.1,000 உதவித் தொகைக்கான தேர்வு: புது அறிவிப்பு

image

8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்வாகும் மாணவர்களின் வங்கிக் கணக்கில் 9 – 12ஆம் வகுப்பு வரை மாதம் ரூ.1,000 உதவித் தொகை செலுத்தப்படும். இந்தத் தேர்வு பிப்.9இல் நடத்தப்பட்டது. இதற்கான விடைக்குறிப்பு www.dge.tn.gov.inஇல் வெளியிடப்பட்ட நிலையில், ஆட்சேபனை இருந்தால், dgedsection@gmail.comஇல் மார்ச் 5க்குள் தெரிவிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் கூறியுள்ளது.

error: Content is protected !!