News February 28, 2025
CUET நுழைவுத்தேர்வு: அட்டவணை வெளியீடு

மத்திய பல்கலை.களில் PG படிப்புகளில் சேர்வதற்கான CUET நுழைவுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. வரும் மார்ச் 13 முதல் ஏப்ரல் 1 ஆம் தேதி வரை முதுநிலை படிப்புகளுக்கான CUET தேர்வு கணினி வழியில் நடத்தப்படவுள்ளது. இதற்கான ஹால்டிக்கெட் உள்ளிட்ட விவரங்களை www.nta.ac.in என்ற தளத்தில் தெரிந்து கொள்ளலாம். SHARE IT.
Similar News
News March 13, 2026
பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் உயர்வு

பத்திரிகையாளர்களின் ஓய்வூதியத்தை மேலும் ₹3,000 உயர்த்தி CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஏற்கெனவே ₹12,000 வழங்கிவரும் நிலையில், தற்போது 15,000-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கீகார அடையாள அட்டை உள்ளவர்களுக்கு விரிவான மருத்துவ காப்பீடு வழங்கப்படும் எனவும், வீட்டு வசதி வாரியத்தில் பத்திரிகையாளர்களுக்கு மனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
News March 13, 2026
ஜெ.வின் மறைவுக்கு பிறகு..

Ex CM ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களும், விலகியவர்களும் அரை டஜனுக்கு மேல் இயக்கங்கள், கட்சிகளை தொடங்கியுள்ளனர். பண்ருட்டி ராமசந்திரன், பெங்களூரு புகழேந்தியை தொடர்ந்து சசிகலாவும் தனி இயக்கம் கண்டுள்ளார். MGR-ஐ பின்பற்றி தொண்டர் ஒருவர் தொடங்கிய கட்சியில் (அஇபுதமமுக) இணைந்துள்ளார். அந்த இயக்கங்கள் & கட்சிகளின் விவரங்களை SWIPE செய்து பார்க்கவும்.
News March 13, 2026
56 வயதில் 22 மனைவிகள்.. பலே ஆசாமி

கேரளாவில் நகைப் பறிப்பில் ஈடுபட்ட பாகுலேயன்(56) என்பவர் போலீசிடம் சிக்கியபோது, அவர் 22 பெண்களை திருமணம் செய்து மோசடி மன்னனாக வாழ்ந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒருவரை திருமணம் செய்திருந்த பாகுலேயன், மனைவிகளுக்கு நகை வாங்கி கொடுத்து திருப்திப்படுத்த திருட்டில் ஈடுபட்டராம். பல பெயர்களில் பல பெண்களை ஏமாற்றி அவர் திருமணம் செய்திருப்பது தெரியவந்துள்ளது. இவரை என்ன சொல்வது?


