News February 28, 2025
இயா்போன் பயன்பாடு செவித் திறனை பாதிக்கும்

ஹெட்போன், இயா்போன் போன்ற கருவிகளை நீண்ட நேரம் பயன்படுத்தினால் செவித்திறன் பாதிக்கும் என்று பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. எனவே திருவள்ளூர் மக்களே அதன் பயன்பாட்டை கூடுமான வரையில் தவிா்க்க வேண்டும். 50 டெசிபல் அளவுக்கு குறைவாக வைத்து பயன்படுத்த வேண்டும். இயா்போனை 2 மணி நேரத்துக்கும் மேல் பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும். குழந்தைகள் கைப்பேசி, தொலைக்காட்சியை அதிக ஒலியுடன் பாா்க்கக் கூடாது.
Similar News
News March 10, 2026
திருவள்ளூர் மாவட்டம் இரவு ரோந்து காவல் விவரம்

திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது.பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும்.மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.
News March 10, 2026
மாற்றுத்திறனாளிகளிடம் பெறப்பட்ட கோரிக்கை மனு!

திருவள்ளுர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இன்று (மார்ச்.9) வருவாய் அலுவலர் சு.சுரேஷ், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு அதற்கு தீர்வுக்கான சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உத்திரவிட்டார். உடன் தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) , மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.
News March 10, 2026
திருவள்ளூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

இன்று மார்ச்.9 திருவள்ளுர் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் சு.சுரேஷ், பொதுமக்களிடம் இருந்து பல்வேறு வகையான 500 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, அதற்கு உரிய தீர்வுக்கான சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உத்திரவிட்டார். உடன் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) வெங்கடேசன் உள்ளிட்டோர் உள்ளனர்.


