News February 28, 2025
நியூஸி.க்கு எதிராக ரோஹித் களமிறங்குவது சந்தேகம்?

CT தொடரில், IND vs NZ மேட்ச் வரும் 2-ம் தேதி துபாயில் நடைபெறுகிறது. இந்நிலையில், இப்போட்டிக்கான பயிற்சியில் ரோஹித் பங்கேற்கவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான மேட்சில் அவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து, அவருக்கு பிசியோதெரபி அளிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனால், நியூசி.க்கு எதிரான ஆட்டத்தில் அவர் களமிறங்குவது சந்தேகம் எனப்படுகிறது. ரோஹித் இல்லனா யாரு டீம் கேப்டன்?
Similar News
News February 28, 2025
மகளிர் உரிமைத் தொகை: யார்-யார் புதிதாக சேர்ப்பு?

மாதம் ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக இணைக்கப்பட இருப்பவர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. புதிதாக ரேஷன் அட்டை பெற்றவர்கள், கூட்டு குடும்பத்தில் இருந்து பிரிந்து தனி ரேஷன் அட்டை பெற்றவர்கள், முன்பு விண்ணப்பிக்க தவறியோர், ஏற்கெனவே நிராகரிக்கப்பட்டு சரியான ஆவணத்தை தாக்கல் செய்தோர், மின்சாரம் 3,600 யூனிட்டுக்கு குறைவாக பயன்படுத்துவோர் சேர்க்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
News February 28, 2025
பங்குச்சந்தைகள் சரிவுக்கு என்ன காரணம்?

பங்குச்சந்தைகள் சரிவுக்கு ரூபாய் மதிப்பு சரிவு முக்கிய காரணமாகும். மேலும், வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறுவது, அமெரிக்காவில் நுகர்வில் மந்தநிலை வரலாம் என்ற கணிப்பு, டிரம்ப் விதித்துள்ள இறக்குமதி வரி உயர்வு, small, midcaps நிறுவனங்களின் சரியும் valuations ஆகியவை முக்கிய காரணங்கள் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனாலும், மார்ச்சில் பங்குச்சந்தைகள் எழுச்சி பெறும் என்ற நம்பிக்கையையும் தெரிவிக்கின்றனர்.
News February 28, 2025
திட்டமிட்டு அசிங்கப்படுத்த முயற்சி.. சீமான் குற்றச்சாட்டு

திட்டமிட்டு தன்னை அசிங்கப்படுத்த முயற்சி நடப்பதாக சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த அவர், பிறருக்கு உதவுவது போல்தான் விஜயலட்சுமிக்கும் உதவியதாக தெரிவித்தார். விசாரணைக்கு வருவதாக காவல்துறையிடம் தாம் தெரிவித்ததாகவும், இதற்கு இரவு 8 மணிக்கு வர போலீசார் சொன்னதாகவும் அவர் குறிப்பிட்டார். அதிமுக ஆட்சியில் போலீஸ் இப்படி நடக்க மாட்டார்கள் எனவும் கூறினார்.