News February 28, 2025
ஈரோடு, பர்னிச்சர் கடையில் தீ விபத்து

ஈரோடு பவானி சாலை காமராஜ் நகரில் அலாவுதீன் என்பவர் வளர்பிறை என்ற பெயரில் பர்னிச்சர் கடை வைத்துள்ளார். நேற்று காலை 6.25 மணியளவில் பர்னிச்சர் ஷெட்டில் மின் கசிவு காரணமாக பழைய மர கட்டை துண்டுகளில் தீப்பிடித்து எரிய துவங்கியது. தகவலறிந்த ஈரோடு தீயணைப்பு துறையினர் அங்கு சென்று இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். இதில் மர பொருட்கள், ப்ளைவுட் உள்ளிட்டவை எரிந்து சாம்பலானது.
Similar News
News August 21, 2025
ஈரோடு வாடகை வீட்டுக்கு போறீங்களா?

வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம்.இதனை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க
News August 21, 2025
ஈரோட்டில் இலவச தையல் மிஷின் வேண்டுமா?

சமூக நலத்துறையின் சார்பில் இலவச தையல் இயந்திரம் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன் பெற 21 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு ஆவணங்களுடன் இ-சேவை மையத்தை அணுகலாம். கூடுதல் தகவலுக்கு 0424-2261405 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஈரோடு கலெக்டர் கந்தசாமி தெரிவித்தார். SHARE பண்ணுங்க!
News August 20, 2025
ஈரோட்டில் ரூ.25,000 சம்பளம்: SUPER வேலை!

ஈரோட்டில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள BRANCH INCHARGE பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வழங்கபடும். டிகிரி முடித்தவர்கள் <