News February 28, 2025
வேலம்மாள் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் புகைப்படம்

மதுரை வேலம்மாள் மருத்துவமனை அருகே வேலம்மாள் சர்வதேச கிரிக்கெட் மைதானம் கட்டப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான அமர்ந்து விளையாட்டை பார்க்கும் வகையில் கட்டப்படும் இந்த மைதானத்தின் கட்டிட பணி முடிவு பெற உள்ளது. இந்த விளையாட்டு மைதானத்தால் மதுரை மேலும் ஒரு புதிய அடையாளத்தைப் பெறுகிறது. தற்போது அந்த மைதானத்தின் புகைப்படம் இணையங்களில் வைரலாகி வருகிறது.
Similar News
News March 14, 2026
மதுரை: + 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை.!

எழுமலை அருகே சீல்நாயக்கன்பட்டி பவுன்ராஜா – சாந்தா தம்பதியரின் மகள் ஆர்த்தி. இவர் எழுமலை அரசு பெண்கள் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். 3 பாடங்களுக்கான தேர்வு எழுதியிருந்தார். நேற்று இயற்பியல் தேர்வு எழுத இருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முதற்கட்ட விசாரணையில் ஆர்த்தி உடல்நல குறைவு ஏற்பட்டதால் தற்கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
News March 14, 2026
மதுரை: 1,317 கிராமங்களுக்கு 5 நாட்கள் குடிநீர் கட்..!

மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் பழுதடைந்துள்ள 130 மீட்டர் நீளமுள்ள குழாய்களை மாற்றியமைக்கும் பணி நிறைவுற்று, அதனை இணைக்கும் பணிகள் நடைபெறவுள்ளதால் 1,317 கிராமங்களில் ( மாவட்டம் முழுவதும் ) குடிநீர் நிறுத்தப்படுகிறது. இன்று (மார்ச்.14) முதல் (மார்ச்.18) வரை 5 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது. பொதுமக்கள் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுங்கள்.