News February 28, 2025

ஆசிய கோப்பை எப்போது? எங்கே?

image

17ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் டி20 ஃபார்மேட்டில் வரும் செப்டம்பரில் தொடங்க உள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆசிய கோப்பை 2025-ஐ நடத்தும் உரிமையை இந்தியா பெற்றுள்ள போதிலும், இந்தப் தொடர் UAE-இல் நடத்தப்பட வாய்ப்புள்ளது. அதனால், IND vs PAK போட்டிகள் அங்கேயே நடைபெறும் எனக் கூறப்படுகிறது. 2026 T20 WCக்கு தயாராகும் வகையில் இந்த தொடர் நடைபெற உள்ளது.

Similar News

News February 28, 2025

EX உலக செஸ் சாம்பியன் ஸ்பாஸ்கி காலமானார்

image

EX உலக செஸ் சாம்பியன் போரீஸ் ஸ்பாஸ்கி (88) காலமானார். ரஷ்யாவை சேர்ந்த அவர், பனிப்போர் காலத்தில் செஸ் உலகில் உச்சத்தில் இருந்தார். உலக ஜூனியர் சாம்பியன், இளம் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று அசத்திய அவர், 1969இல் உலக சாம்பியன் பட்டத்தை வென்று 1972 வரை அதை தக்க வைத்திருந்தார். 1972இல் அமெரிக்க வீரர் பாபி பிஷ்ஷரால் தோற்கடிக்கப்பட்டார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News February 28, 2025

இன்றே கடைசி நாள்.. ரயில்வேயில் 1,036 Vacancy!

image

ரயில்வேயில் RRBயின் மூலமாக 1,036 காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன. முதுகலை ஆசிரியர்கள், தலைமை சட்ட உதவியாளர், பொது வழக்கறிஞர்கள் போன்ற பதவிகளுக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கணினி வழி மூலம் தேர்ச்சி நடைபெறும். விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். வேலைக்கேற்ப ₹35,400 – ₹47,900 வரை சம்பளம் வழங்கப்படும். முழு விவரங்களுக்கு <>இந்த லிங்கை கிளிக் செய்யவும்<<>>.

News February 28, 2025

11 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை

image

குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று IMD கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை மறுநாள் தென்தமிழகம், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கணித்துள்ளது.

error: Content is protected !!