News February 28, 2025
வெல்லமண்டி நடராஜன் மனைவி காலமானார்

அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் மனைவி சரோஜா தேவி காலமானார். அதிமுக இபிஎஸ், ஒபிஎஸ் என 2 அணிகளாக பிரிந்த நிலையில், ஒபிஎஸ் அணியில் வெல்லமண்டி நடராஜன் அமைப்புச் செயலாளராக உள்ளார். அவரின் மனைவி சரோஜா தேவி உடல்நலக்குறைவு ஏற்பட்டு காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து கேள்விப்பட்டு வெல்லமண்டி நடராஜனுக்கு அக்கட்சி நிர்வாகிகள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News March 7, 2026
ஸ்டாலின் TAX.. நேரடியாக அட்டாக் செய்த விஜய்

நிதி சார்ந்த பல <<19322121>>வாக்குறுதிகளை<<>> விஜய் வெளியிட்டார். அப்போது, ஸ்டாலினால் செய்ய முடியாததை நீ எப்படி செய்வாய் என கேட்கிறீர்களா எனக் கேட்டு அதற்கு பதிலும் அளித்தார். அதில், பட்ஜெட் நிதியில் 20% ஸ்டாலினுக்கு செல்வதாகவும், 10% அமைச்சர்களுக்கு செல்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். அரசுக்குத்தான் வரி கொடுப்போம்; அரசே ஒருவருக்கு வரி கொடுப்பதை ஸ்டாலின் TAX என்று தானே சொல்ல வேண்டும் என்றும் அவர் விமர்சித்தார்.
News March 7, 2026
கட்சி மாறியது ஏன்? OPS

கட்சிக்கு விசுவாசமாக இருந்த தன்னை EPS திட்டமிட்டு வெளியேற்றிவிட்டதாக OPS குற்றம்சாட்டியுள்ளார். மதுரையில் தனது ஆதரவாளர்கள் ஒரு லட்சம் பேர் திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் பேசிய அவர், அதிமுகவை வஞ்சகமாக EPS அபகரித்துக் கொண்டதாகவும் சாடியுள்ளார். ஆனால், ‘மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’ என்பதற்கு இலக்கணமாக, தன்னை ஸ்டாலின் திமுகவில் இணைத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
News March 7, 2026
சுந்தர் பிச்சைக்கு ₹6,361 கோடி சம்பளம்!

கூகுள் CEO சுந்தர் பிச்சைக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு $692 மில்லியன் (₹6,361 கோடி) சம்பளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உலகின் மிக அதிக சம்பளம் வாங்கும் CEO-க்களில் ஒருவராக அவர் மாறியுள்ளார். 2004-ல் கூகுளில் இணைந்த சுந்தர் பிச்சை 2015-ல் CEO ஆக பதவியேற்றார். அதன்பிறகு கூகுள் சந்தை மதிப்பு 7 மடங்கு உயர்ந்தது. தற்போது AI தொழில்நுட்ப போட்டியிலும் கூகுள் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.


