News February 28, 2025
இயா்போன் பயன்பாடு செவித் திறனை பாதிக்கும்

ஹெட்போன், இயா்போன் போன்ற கருவிகளை நீண்ட நேரம் பயன்படுத்தினால் செவித்திறன் பாதிக்கும் என்று பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. எனவே காஞ்சிபுரம் மக்களே அதன் பயன்பாட்டை கூடுமான வரையில் தவிா்க்க வேண்டும். 50 டெசிபல் அளவுக்கு குறைவாக வைத்து பயன்படுத்த வேண்டும். இயா்போனை 2 மணி நேரத்துக்கும் மேல் பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும். குழந்தைகள் கைப்பேசி, தொலைக்காட்சியை அதிக ஒலியுடன் பாா்க்கக் கூடாது.
Similar News
News August 25, 2025
காஞ்சிபுரம்: போனில் மூழ்கிய மாணவன் தூக்கிட்டு தற்கொலை!

காஞ்சிபுரம், சோமங்கலம் அருகே வசித்து வருபவர் சரவணன். இவரது மகன் கோகுல் அதே பகுதியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கோகுல் பள்ளிக்கு செல்லாமல் போனில் கேம் விளையாடி கொண்டிருந்தார். இதனை அவரது தாயார் கண்டித்துள்ளார். இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கோகுல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சோமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News August 25, 2025
காஞ்சிபுரத்தில் நாளை மின்தடை!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 25) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, களியாம்பூண்டி மற்றும் மாகரல் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளான திருப்புலிவனம் அழிசூர் களியாம்பூண்டி, மருதம், சிலாம்பாக்கம், மானம்பதி, உத்திரமேரூர் & சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 24, 2025
காஞ்சிபுரத்தில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 24) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.