News February 28, 2025

குடும்ப அட்டைத்தாரர்களுக்கு அறிவுறுத்தல்

image

கரூர் மாவட்டத்தில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-ன் படி முன்னுரிமை குடும்ப அட்டைகள் கொண்ட அனைத்து உறுப்பினர்களும் கைவிரல் ரேகை பதிவு செய்வதை மார்ச் 31-ம்தேதிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும். எனவே, இதுவரை பதிவு செய்யாத குடும்ப அட்டைகள் வைத்துள்ளவர்கள் அருகில் உள்ள நியாய விலைக்கடைகளில் கைவிரல் ரேகை பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 24, 2025

கரூர்:குழந்தைகளுக்கு மாதம் 2000 அறிவித்தார் கலெக்டர்!

image

பெற்றோரை இழந்த குழந்தைகள் பாதுகாத்திடும் வகையில் அவர்களது பள்ளி படிப்பு வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர, 18 வயது வரை மாதம் ரூ.2000 உதவித்தொகை வழங்குவதோடு மட்டுமல்லாமல், கல்லூரி கல்வி மற்றும் மேம்பாட்டு பயிற்சிகளும் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த திட்டத்தில் பயன் பெற மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவரிடம் விண்ணப்பிக்கலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்தார். SHARE பண்ணுங்க

News August 24, 2025

தக்காளி விலை திடீர் உயர்வு

image

கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட் வியாபாரிகள் கூறியதாவது: தொடர் மழையால் தக்காளி செடிகள் அழுகி, பூக்கள் உதிர்ந்து விட்டன. இதனால்,கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட்டுக்கு குறைந்த அளவே தக்காளி வரத்தாகிறது. கடந்த மாதம் கிலோ, 40 ரூபாய் வரை விற்ற ஒரு கிலோ பெரிய ரக தக்காளி தற்போது, 50 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. சிறிய அளவிலான தக்காளி, 30 ரூபாயில் இருந்து, 40 ரூபாயாக உயர்ந்துள்ளது.

News August 23, 2025

கரூர்: கணவன் அடித்தால்! உடனே CALL

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி, கரூர் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9150368751-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!