News February 28, 2025
தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் அரசு விழாவா?

திருவள்ளூரில், நேற்று (பிப்.27) திமுக அமைச்சர்கள் பங்கேற்ற அரசு விழாவில், தமிழ்தாய் வாழ்த்துப் பாடாமல் நிகழ்ச்சியைத் தொடங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. MRK பன்னீர்செல்வம், பொன்முடி, நாசர் மற்றும் திருவள்ளூர் எம்.எல்.ஏ., ஆட்சியர் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடதது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 29, 2025
திருவள்ளூர்: B.Sc,B.E.,B.Tech படித்தவர்கள் கவனத்திற்கு

திருவள்ளுர் மக்களே மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1,543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளமாக மாதம் Rs.30,000 முதல் 1,20,000 வரை வழங்கப்படும். இதற்கு B.Sc, B.E. ,B.Tech, M.Tech. ME படித்தோர் இங்கு <
News August 29, 2025
திருவள்ளூர்: சென்ட்ரல் மின்சார ரயில்கள் ரத்து

பொன்னேரி கவரப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி (இரவு 11:20 ரயில்) மற்றும் கும்மிடிப்பூண்டி – சென்ட்ரல் (இரவு 9:25 மணி ரயில்) இன்று முதல் 31ம் தேதி வரை ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 29, 2025
திருவள்ளூரில் இன்று மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்று 18 மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் லேசான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.