News February 28, 2025
கோவில் ஊர்வலத்தில் மோதல்: 5 பேருக்கு படுகாயம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் அங்காளம்மன் ஆலய மயான கொள்ளை திருவிழா சாமி ஊர்வலத்தின் போது கலெக்டர் உத்தரவை மீறி கட்சிக் கொடிகளுடன் சிலர் ஆடி வந்தனர். இதில் பாமக மற்றும் விசிக கொடியுடன் ஆடியவர்களிடையே மோதல் ஏற்பட்டு கல்விச்சில் ஈடுபட்டனர். இதில், பாமகவைச் சேர்ந்த 5 பேருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி இருதரப்பினரையும் கலைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News March 5, 2026
விழுப்புரம் ரயில் நிலையத்தில் துடிதுடித்து பலி!

விழுப்புரம் பவர் ஹவுஸ் சாலையைச் சேர்ந்த மணிகண்டன் (38), விழுப்புரம் ரயில் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பெட்டிகளைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று ரயில் யார்டில் தண்ணீரை பீய்ச்சியடிக்கும் கருவி மூலம் அவர் சுத்தம் செய்தபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News March 5, 2026
விழுப்புரம்: இரவு ரோந்து பணி விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.04) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.