News February 28, 2025
10 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக 10 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழகத்தின் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், மதுரை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தொடர்பான அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை.
Similar News
News April 3, 2026
விதிமீறல்.. அபிஷேக் சர்மாவுக்கு ஷாக் கொடுத்த BCCI!

SRH வீரர் அபிஷேக் சர்மா விதிமீறலில் ஈடுபட்டதாக ‘Article 2.3 of IPL Code of Conduct’ விதிமுறையின் கீழ் ஒரு Demerit பாய்ண்ட்டும், போட்டி கட்டணத்தில் இருந்து 25% அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், KKR-க்கு எதிரான போட்டியின்போது அவர் என்ன விதிமீறலில் ஈடுபட்டார் குறித்த நேரடி தகவலை IPL குறிப்பிடவில்லை. ஆபாசமான, வசைபாடும், அவதூறான வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாது என்பதே, Article 2.3 விதியாகும்.
News April 3, 2026
60% இருக்கைகள் ஃப்ரீ.. திரும்ப பெற்ற மத்திய அரசு!

விமானங்களில் 60% இருக்கைகளை தேர்வு செய்ய <<19414079>>தனிக் கட்டணம்<<>> வசூலிக்கக்கூடாது என 3 வாரங்களுக்கு முன் பிறப்பித்த உத்தரவை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது. எண்ணெய் தட்டுப்பாட்டால் நிதி நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாக இந்திய விமான நிறுவனங்களின் கூட்டமைப்பு முறையீட்டின் பேரில், மறு உத்தரவு வரும் வாபஸ் பெறப்படுவதாகவும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
News April 3, 2026
இந்திய மருந்துகளுக்கு 100% வரி… டிரம்ப் அறிவிப்பு

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் Patented மருந்துகளுக்கு ஜூலை 31 முதல் 100% வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து Generic மருந்துகளே USA-வுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பதால் தற்போதைக்கு பாதிப்பு குறைவே. ஆனால், USA-வுக்கு உற்பத்தியை மாற்றாத நிறுவனங்களின் ஜெனரிக் மருந்துகளுக்கும் விரைவில் வரி உயர்த்தப்படலாம் என கூறப்படுகிறது.


