News February 28, 2025
சாம்பியன்ஸ் டிராபி: ஆஸி Vs ஆப்கன் இன்று மோதல்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகிறது. லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் வென்று, அரையிறுதிக்கு தகுதி பெற இரு அணிகளுமே முனைப்பு காட்டும் என்பதால் போட்டியில் பரபரப்புக்கு குறைவிருக்காது. பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஸ்போர்ட்ஸ்18 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
Similar News
News March 26, 2026
மதுரையில் 600 டீ கடைகள் மூடல்

மதுரை மாநகரில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக 600 டீ கடைகளை மூடியுள்ளனர். இதனால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கடை நடத்துபவர்கள் சிலிண்டரை அதிக விலை கொடுத்து வாங்கி வருவதாகவும், உணவு தொழில் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும் மாநகர் டீ கடை சங்கத்தின் துணை செயலாளர் கூறியுள்ளார். தமிழகத்தில் சிறிய அளவிலான கடைகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
News March 26, 2026
வந்தே மாதரம் பாடுவது காட்டாயமல்ல: சுப்ரீம் கோர்ட்

அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடுவது கட்டாயமில்லை என்று சுப்ரீம் கோர்ட் தெளிவுபடுத்தியுள்ளது. மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட புதிய விதிமுறைகளில், அரசு நிகழ்ச்சிகளில் தேசிய கீதத்திற்கு முன்பாக வந்தே மாதரம் பாட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால், அது ஒரு அறிவுறுத்தல் மட்டுமே, அதை பின்பற்றாதவர்களுக்கு எந்தவித தண்டனையும் குறிப்பிடப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
News March 26, 2026
இன்றைய நல்ல நேரம்

மார்ச் 26, பங்குனி 12 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 12:30 PM – 1:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: அஷ்டமி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்.


